சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்த யோகி.. பகவத்துடன் மோடி சந்திப்பு! பாஜக திடீர் யூ டர்ன்! பின்னணி என்ன?
டெல்லி: எதிர்வரும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதி அடிப்படையிலும் நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2025, ஏப்ரல் 30 அன்று திடீரென அறிவித்தது. முந்தைய காலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை மறைமுகமாக எதிர்த்து வந்த அல்லது அது நிர்வாக ரீதியாக கடினம் என உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்த ஒரு அரசாங்கத்திடம் இருந்து வந்த இந்த அறிவிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த திடீர் முடிவு, எதிர்க்கட்சிகளின் அழுத்தம் மற்றும் மோடி அரசாங்கத்தின் அரசியல் நிர்பந்தம் காரணமாகவே எடுக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

எனினும், பீகார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வந்துள்ளனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 'பிரிந்தால் வெட்டுப்படுவோம்' என்று கூறி சாதிவாரி கணக்கெடுப்பை மறுத்துவந்தாலும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா அதற்கு ஆதரவாகவே குரல் கொடுத்துள்ளார்.
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிய அனைத்துக் கட்சிக் குழுவிலும் உள்ளூர் பாஜக தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், பாஜகவின் உயர்மட்ட தலைவர்களின் பேச்சுகள் பெரும்பாலும் சாதிவாரி கணக்கெடுப்பை விரும்பாததையே உணர்த்தியது. இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசே முன்வந்து நடத்தும் என்றோ, இவ்வளவு விரைவாக முடிவெடுக்கும் என்றோ எதிர்பார்க்கப்படவில்லை. இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

சாதி ஒரு யதார்த்தம், எனவே அரசியல் நிர்பந்தம்
இந்தியாவில் சாதி என்பது ஒரு மறுக்க முடியாத யதார்த்தம். எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் சாதி அமைப்பு நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 40-50% பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆவர். இது உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஒரு வலிமையான வாக்கு வங்கியாகும்.
காங்கிரஸ், மண்டல் கட்சிகள் (சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன. 2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாகவும், 50% இட ஒதுக்கீட்டு வரம்பை நீக்குவதாகவும் வாக்குறுதி அளித்தது.
ராகுல் காந்தி இதை ஒரு 'சமூக எக்ஸ்ரே' என்று வர்ணித்தார். தனது வலியுறுத்தல் காரணமாகவே மோடி அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மக்களவைத் தேர்தலில், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி பிற்படுத்தப்பட்டோர் அரசியலை முன்வைத்து 43 இடங்களில் வெற்றி பெற்று பாஜகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு இந்து முதலில் தனது சாதியைச் சேர்ந்தவர், அதன் பிறகே இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதை பாஜக இப்போது உணர்ந்துள்ளது. பீகார் தேர்தலில் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பாததாலேயே இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இட ஒதுக்கீடு அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானது
2025 இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு முக்கிய பிரச்சினையாகும். 2023 இல் பீகாரில் நடத்தப்பட்ட சாதி கணக்கெடுப்பில், 36% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் (OBC), 27% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் (EBC) அடையாளம் காணப்பட்டனர். அதாவது, அங்குள்ள மக்கள் தொகையில் 63 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். ராஷ்டிரிய ஜனதா தளமும் ஐக்கிய ஜனதா தளமும் பீகாரில் வலிமையாக இருப்பதற்கு முக்கிய காரணம், இவ்விரு கட்சிகளும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வாக்குகளை தங்கள் வசம் வைத்திருப்பதே.
இவ்விரு கட்சிகளுக்கிடையே பாஜகவால் இன்னும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. திலீப் ஜெய்ஸ்வால், சாம்ராட் சௌத்ரி போன்ற பிற்படுத்தப்பட்ட தலைவர்களை மாநில கட்சித் தலைவர், துணை முதல்வர் போன்ற பதவிகளில் பாஜக அமர்த்தியிருந்தாலும், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு உள்ள அளவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களிடம் பாஜகவால் சென்றடைய முடியவில்லை. பீகாரில் நிதிஷ் குமாருடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பின் ஆதரவாளரான நிதிஷ் குமாரின் ஆதரவைப் பெறவும் பாஜகவுக்கு இந்த அறிவிப்பு அவசியமாகிறது.
சாதிகளிடையே அதிகரித்த கவலை
சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சாதி பாகுபாடு இந்தியாவில் ஒரு தீவிரமான பிரச்சினையாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், மராத்தா (மகாராஷ்டிரா), ஜாட் (ஹரியானா), படேல் (குஜராத்) போன்ற சமூகங்கள் இட ஒதுக்கீடு கோரி பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தியுள்ளன. மற்ற சாதிகளை விட ஒப்பீட்டளவில் பணக்காரர்களாகவும், சக்தி வாய்ந்தவர்களாகவும், வட இந்தியாவில் சமூக ரீதியாக உயர்ந்தவர்களாகவும் இருக்கும் படேல்கள், ஜாட்கள், மராத்தாக்கள் கூட தங்களது சாதியின் இருப்பு பற்றிய கவலை காரணமாகவே இட ஒதுக்கீடு கோரி வருகின்றனர். இந்த சமூக அழுத்தத்தை அரசு புறக்கணிக்க முடியவில்லை.
மத அடையாளம் மிகவும் பெரியதாகிவிட்டது
சமீபத்தில் ஆர்எஸ்எஸ், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு இல்லை எனத் தெரிவித்தது. ஆனால், இதன் அடிப்படையில் அரசியல் இருக்கக்கூடாது என நிபந்தனை விதித்தது. எனினும், பாஜகவே இதன் அடிப்படையில் அரசியல் செய்யும். எதிர்காலத்தில், சாதிவாரி கணக்கெடுப்பை தங்களுக்கு ஆதயமாக மாற்ற பாஜக ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் 'இந்து' என்ற வார்த்தை மிகவும் பரவலாகிவிட்டதால், ஜாதி கணக்கெடுப்பு பற்றி பாஜக கட்சி இப்போது கவலைப்படவில்லை. பல சாதிகளும், பிரிவினரும் இப்போது இந்து மதத்தின் குடையின் கீழ் இணைய முடியும் என பாஜக நினைக்கிறது. அதிகாரமே பல பிரச்சனைகளுக்கு எளிதான தீர்வாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமணம் தங்களை சிறுபான்மையினராக அறிவிக்கப் போராடியது, ஆனால் இன்று இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று கூற பெருமை கொள்கிறது.
பௌத்தமும், பிற பிரிவினரும் இதே நிலையில்தான் உள்ளனர். சீக்கியர்களும் விரைவில் நாங்கள் இந்துக்கள் என்று கூறக்கூடும். சாதிகளுக்கும் இதுவே பொருந்தும். இந்து மதம் முக்கியத்துவம் மிக்கதாக மாறிவிட்டால், சாதிகள் இரண்டாம் பட்சமாகிவிடும் என்று பாஜக நம்புகிறது. ஆனால் அது யதார்த்தத்தில் சரியாக வருமா என்பதை பற்றி பாஜக இப்போது கவலைப்படவில்லை. தன்னால் ஒரு குடையின்கீழ் இணைக்க முடியும் என்று நம்புகிறது.
ஆர்எஸ்எஸ் திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடையேயான சந்திப்பிற்குப் பிறகே, 2025 ஏப்ரல் 29 அன்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்துக்களின் ஒற்றுமையை பேண ஆர்எஸ்எஸ் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது என்பது தெளிவாகிறது. 2011 கணக்கெடுப்பு போல அரசு தோல்வியை சந்திக்காமல் இருக்க, அறிவியல் பூர்வமாகவும், வெளிப்படையாகவும் கணக்கெடுப்பை வடிவமைக்க ஆர்எஸ்எஸ் அரசுக்கு அறிவுறுத்தி வருகிறது. தரவுகளை நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த இது முக்கியத்துவம் அளிக்கிறது.
ஆர்எஸ்எஸ் தனது கிளைகள் மற்றும் துணை அமைப்புகள் மூலம் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் பிரச்சாரத்தை நடத்தும். இது கணக்கெடுப்பால் எழக்கூடிய சாதி பதட்டங்களைக் குறைப்பதற்கான ஒரு முயற்சி. இட ஒதுக்கீட்டை துணைப் பிரிவுகளாகப் பிரிப்பது மற்றும் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது போன்ற முக்கிய வாய்ந்த விஷயங்களில் அனைத்து சமூகங்களின் ஒருமித்த கருத்தை ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது, இதன் மூலம் சமூக நிலையற்ற தன்மையை தவிர்க்க முடியும்.
கணக்கெடுப்பின் பெருமை எதிர்க்கட்சிகளுக்குச் சென்றால், அது பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் வாக்காளர்களை அவர்கள் பக்கம் ஈர்க்கும் என ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இரண்டும் அஞ்சுகின்றன. ஆர்எஸ்எஸ் தனது இந்துத்துவா சித்தாந்தத்தை சாதி அடிப்படையிலான அரசியலுடன் சமநிலைப்படுத்திவிட பெரும் முயற்சிகளை இனி எடுக்கும்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications