மோடியை விட ராகுல் காந்திதான் பிரதமர் பதவிக்கு பெஸ்ட்.. தமிழகம், கேரள மக்கள் கருத்து
டெல்லி: பிரதமர் பதவிக்கு மோடியை விட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திதான் சரியான தேர்வு என தமிழகம் மற்றும் கேரளா மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடிக்கு 59.22% பேர் ஆதரவாகவும் ராகுல் காந்திக்கு 25.62% பேர் மட்டுமே ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்களின் செயல்பாடுகள், பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்வைத்து ஐ.ஏ.என்.எஸ். - சிவோட்டர் இணைந்து 2021- Nation Survey என்ற பெயரில் நாடு முழுவதும் 543 லோக்சபா தொகுதிகளில் 30,000 பேர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. இக்கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரதமர் பதவிக்கான தேர்தவில் ராகுல் காந்தியைவிட மோடிதான் சிறப்பானவர் என 59.22% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 25.62% பேர் மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளனர்.

ஒடிஷா, இமாச்சலில் மோடிக்கு ஆதரவு
ஒடிஷா, இமாச்சல பிரதேசத்தில் 80%க்கும் அதிகமானோரும் வடகிழக்கு மாநிலங்களில் 75.68% பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ராகுல் காந்திக்கு ஒடிஷாவில் 7.3%, இமாச்சல் பிரதேசத்தில் 10.2%, வடகிழக்கு மாநிலங்களில் 10.96% பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கேரளா, தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு
அதேநேரத்தில் கேரளாவில் ராகுல் காந்திக்கு 54.28%; தமிழகத்தில் 48.26% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடிக்கு மேற்கு வங்கத்தில் 62.19%; ராகுல் காந்திக்கு 28.38%; ஜம்மு காஷ்மீரில் மோடிக்கு 46.74%; ராகுல் காந்திக்கு 34.15% பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

மாநிலங்களில் மோடி ஆதரவு
கர்நாடகா, சத்தீஸ்கர், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு சுமார் 65% ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மோடிக்கு 61.75%; ராகுல் காந்திக்கு 22.98% ; தெலுங்கானாவில் மோடிக்கு 60.32% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உ.பி, பஞ்சாப் மாநிலங்கள்
உத்தரப்பிரதேசத்தில் மோடிக்கு 56.21%; ராகுல் காந்திக்கு 29.48% ஆதரவு என பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் மோடிக்கு அமோக ஆதரவும் ராகுல் காந்திக்கு 29.5% மட்டுமே ஆதரவு கிடைத்திருக்கிறது. ராகுல் காந்திக்கு 15 மாநிலங்களில் 25%க்கும் குறைவான ஆதரவும் 4 மாநிலங்களில் 20%க்கும் குறைவான ஆதரவும் கிடைத்துள்ளது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications