காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி அஞ்சலி.. டெல்லி போர்நினைவுச்சின்னத்திலும் மரியாதை!
Recommended Video
டெல்லி: பிரதமராக இன்று மீண்டும் பதவியேற்கவுள்ளதை முன்னிட்டு மகாத்மா காந்தி, வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
நரேந்திர மோடி இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் 2வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்கான விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாத் காந்தியின் நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்தினார். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் அவரது வளர்ப்பு மகளும் அஞ்சலி செலுத்தினார். அவரிடம் மோடி நலம் விசாரித்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களை தொடர்ந்து போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
போர் நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்த சென்ற பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்று அழைத்து சென்றார். மோடி பதவியேற்பை முன்னிட்டு டெல்லியில் மத்திய பாதுகாப்பு படையினர், அதிவிரைவுப் படையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications