டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. மம்தா பானர்ஜியே எனக்கு குர்தா அனுப்புறவர்தான்.. மோடி பளீச் பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியை நேர்காணல் எடுத்த நடிகர் அக்சயகுமார்-வீடியோ

    டெல்லி: எதிர்க்கட்சிகளில் கூட எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆண்டுதோறும் எனக்கு குர்தாக்களை அனுப்புவார் என நடிகர் அக்ஷய்குமாருடனான பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

    அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமர் மோடி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் நடிகர் அக்ஷய்குமார், அவரிடம் எடுத்த பேட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தில் வெளியாகியுள்ளது.

    அதில் அக்ஷய்குமார் கேட்ட பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளுக்கு பிரதமரும் சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.

    ட்ரம்ப் அரசு குடைச்சல்.. அமெரிக்காவுக்கு குட்பை.. கனடாவிற்கு ஷிப்ட்டாகும் இந்திய ஐடி பணியாளர்கள்! ட்ரம்ப் அரசு குடைச்சல்.. அமெரிக்காவுக்கு குட்பை.. கனடாவிற்கு ஷிப்ட்டாகும் இந்திய ஐடி பணியாளர்கள்!

    உதாரணம்

    உதாரணம்

    அந்த பேட்டியில் எப்போதும் நீங்கள் கண்டிப்பான நிர்வாகி என்ற பிம்பம் உள்ளதே என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கையில், அதுதவறு. அந்தந்த பணிகள் முடிவடைய வேண்டும். இதற்காக நான் அடிக்கடி நீண்ட நேரம் பணியாற்றியுள்ளேன், அதை மக்களும் பார்த்துள்ளனர். கடுமையான நிர்வாகியாக இருந்தால் உங்களால் யாரிடமும் வேலை வாங்க முடியாது. ஒரு உதாரணமாக இருந்து அவர்களை வழிநடத்துவதே சிறந்தது.

    ஜாலி

    நான் சிறு வயது முதலே காமெடியாக பேசி வருவேன். ஆனால் தற்போது நான் அவ்வாறு பேசினால் உங்கள் டிஆர்பி ரேட்டிங்கிற்காக நான் பேசியதை தவறாக திரித்து கூறலாம். என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கவே இன்னும் விரும்புகிறேன்.

    இனிப்புகள்

    இனிப்புகள்

    எதிர்க்கட்சிகளில்கூட எனக்கு நண்பர்கள் உள்ளனர். காங்கிரஸின் குலாம் நபி ஆசாத் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இதை நான் தேர்தல் காலத்தில் சொல்லக் கூடாது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு ஆண்டுதோறும் குர்தாக்களையும் பரிசுகளையும், இனிப்புகளையும் அனுப்புவார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இனிப்புகளை அனுப்புவது உண்டு.

    கணக்கு

    கணக்கு

    நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தேனா வங்கி அதிகாரிகள் எங்கள் பள்ளிக்கு வந்து சேமிப்புக்கான கணக்கை தொடங்கி கொடுத்தனர். ஆனால் என்னிடம் போதுமான பணம் இருந்ததே இல்லை. பின்னர் என்னை பள்ளியில் தொடர்பு கொண்ட அதிகாரிகள் கணக்கை செயல்படாமல் வைத்திருந்ததால் அந்த கணக்கை குளோஸ் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர்.

    பெருமை

    பெருமை

    பின்னர் 30-32 வயதில் நான் முதல்வரானதும் எனக்கு அவர்களது வங்கியில் சிறு வயது முதலே கணக்கிருப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் எனது முதல்வருக்கான ஊதியம் அந்த வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. குஜராத்தில் நீண்ட காலம் பணியாற்றிய முதல்வர் நான் தான். இந்த பெருமையை எந்த பிரதமரும் பெற்றதில்லை.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை எப்போது சந்தித்தாலும் அவருடன் காமெடியாக பேசுவேன். ஜோக்ஸ் சொல்வேன். அது நட்பு ரீதியிலான பரிமாற்றம். நான் நீண்ட நேரம் தூங்குமாறு அவர் எனக்கு அறிவுறுத்துவார். இயற்கை மருத்துவத்தின் மீதே எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு.

    சமூகவலைதளங்கள்

    சமூகவலைதளங்கள்

    நான் முதல்வராகும் வரை எனது துணிகளை நான்தான் துவைப்பேன். நீண்ட கைவைத்த சட்டைகள் எனக்கு தொல்லையாக இருந்ததால் சட்டை கைகளை கட் செய்து விட்டேன். மீம்ஸ்கள் எனக்கு பிடிக்கும். சமூகவலைதளங்களின் நன்மையே, சாதாரண மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான்.

    மாம்பழங்கள்

    மாம்பழங்கள்

    இல்லை. எனது தாய் எப்போதும் எனக்கு பணம் தருவார் ( உங்கள் ஊதியத்தின் ஒரு பகுதியை தாய்க்கு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு). நான் எப்போது அவரை பார்த்தாலும் எனக்கு பணம் தருவார். நீங்கள் மற்றொன்றை புரிந்து கொள்ள வேண்டும். நான் முதல்வரானதிலிருந்தே எனது தேசத்தைத்தான் எனது குடும்பமாக பாவிக்கிறேன். எனக்கு மாம்பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றார் பிரதமர் மோடி.

    English summary
    PM Narendra Modi in an interview with Akshaykumar says that he has so many friends in Opposition. Mamata Banerjee is also a friend and sends me gifts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X