கொரோனா ஊரடங்கு... கடைசில ‘அந்த’க் கதையும் இப்போ உண்மை ஆகிடுச்சே..!
மான் மீது அமர்ந்து குரங்கு சவாரி செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.
டெல்லி: சிறார் கதைகளில் வருவது போன்று மான் மீது அமர்ந்து குரங்கு சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
கொரோனா ஊரடங்கால் மக்கள் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க, விலங்குகள் எல்லாம் சாலைகளில் ஜாலியாக சுற்றித் திரிகிறது. எதேர்ச்சையாக அவை கண்ணில்படும்போது, அதை செல்போனில் வீடியோ எடுத்து வைரலாக்கி விடுகின்றனர் நம் மக்கள்.

அதுபோல் தற்போது வைரலாகி இருக்கும் வீடியோவில், குரங்கு ஒன்று மான் மீது அமர்ந்து ஜாலியாக சவாரி செய்கிறது. அந்த வீடியோவில் நிறைய மான்களும் குரங்குகளும் இருக்கின்றன. அதில் ஒரு குரங்கு மான் ஒன்றின் மீது ஏறுகிறது. பின்னர் அதன் மேல் லாவகமாக அமர்ந்து கொள்கிறது.
அந்த மான், குரங்கை சுமந்தபடியே எங்கும் அலைகிறது. மான் புல்லை மேயும் போது கூட அந்த குரங்கு இறங்கவில்லை. இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், மானுக்கும், குரங்குக்கும் இடையிலான நட்பை பாராட்டியுள்ளனர். குழந்தைகளுக்கான கதைகளில் படித்தது போலவே இந்த காட்சி இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications