அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. சீக்கிரமே தடுப்பூசி.. அப்டேட் கொடுத்த சீரம் நிறுவன சிஇஓ
டெல்லி: ஆப்பிரிக்க நாடுகளை குரங்கு அம்மை நோய் அதிதீவிரமாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், குரங்கு அம்மைக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக சீரம் இந்திய நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனவல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கி நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் ஓய்ந்த நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 32 பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உடல் பலவீனம், வீங்கிய நிணநீர் முனைகள், தொண்டை புண், சொறி, காய்ச்சல், தசை வலி, முதுகு வலி ஆகியன குரங்கு அம்மையின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே உடலில் தென்பத் தொடங்கிவிடும். குறிப்பாக காய்ச்சல், தொண்டை புண், தலைவலி முதலிலேயே தென்படத் தொடங்கிவிடும்.

தொற்று பரவியவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதன் மூலம் இந்நோய் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு இந்த தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்த நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்த நோயாளியை தனிமைப்படுத்த வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்ட உடனே முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் 4 வாரங்களில் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு விட முடியும் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுநாள் வரை இந்தியாவில் குரங்கு அம்மை யாருக்கும் பரவவில்லை. இருப்பினும், வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் நாட்டுக்குள் குரங்கு அம்மை பரவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா, குரங்கு அம்மைக்கு விரைவில் தடுப்பூசியை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: குரங்கு அம்மை உலகளாவிய பொது சுகாதார நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஆபத்தான நிலையில் இருக்கும் பத்து லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சீரம் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சீரம் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ஓராண்டிற்குள் மேலும் பல புதுப்பிப்புகள், பாசிட்டிவான செய்திகள் பகிரப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர். தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் வலிமையை சாதகமாக ஆராய வேண்டும் என்று எச்ஐவி, எஸ்டிடி ஆலோசகர் மருத்துவர் ஈஸ்வர் கிலாடா கூறியுள்ளார்.
மேலும், குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டால் அதற்கான பிரேத்யேகமான, சோதனையோ சிகிச்சையோ, மருந்துகளோ இல்லை. ஆனால், டெவிகோவிரோமேட் வெற்றிகரமாக முயற்சிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications