பாகிஸ்தானால் இனி வாலாட்ட முடியாது.. ராணுவ தளபதி கைக்கு போன ‛சூப்பர் பவர்'..என்ன அது? ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானுடன் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. அதேபோல் பயங்கராதிகள் ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இப்படியான சூழலில் தான் நம் நாட்டின் ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு சிறப்பு அதிகாரம் என்பது வழங்கப்பட்டுள்ளது. இதனால் இனி பாகிஸ்தானால் வாலாட்ட முடியாது. அந்த அதிகாரம் என்ன? அது ஏன் முக்கியம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதற்கு இப்போது நம் நாட்டின் முப்படைகள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. நம் நாட்டின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதலால் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது.

more-power-to-military-union-government-grants-emergency-procurement-powers-to-all-3-armed-forces

அதுமட்டுமன்றி லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானால் நம் நாட்டை தொட கூட முடியவில்லை. நேற்றைய தினம் பாகிஸ்தான் ஏவுகணை, போர் விமானம், ட்ரோன்களை அனுப்பி காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களை தாக்க முயன்றது. ஆனால் நம் நாடு சாதுர்யமாக செயல்பட்டு அந்த தாக்குதலை முறியடித்தது.

பாகிஸ்தானில் இருந்து தாக்க வந்த ட்ரோன், ஏவுகணை மற்றும் போர் விமானங்களை நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் வானிலேயே இடைமறித்து அழித்தது. இதனால் பாகிஸ்தானால் நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜம்மு காஷ்மீரின் எல்லையில் மட்டும் பாகிஸ்தான் தொடர்ந்து வாலாட்டி வருகிறது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டின் கோட்டின் அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு மற்றும் ஷெல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் அப்பாவிகள் இறந்து வருகின்றனர். இதற்கும் தக்க பதிலடி என்பது கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் திருந்தாமல் உள்ளது.

இந்நிலையில் தான் பாகிஸ்தானின் கொட்டத்தை அடக்கவும், பதிலடி கொடுப்பது தொடர்பாக இன்று முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது எல்லையில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிகள் பற்றி கேட்டறிந்தார். ராணுவம் உள்பட முப்படைகளும் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு சிறப்பு அதிகாரம் என்பது வழங்கி உத்தரவிடப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு நிச்சயம் பிரச்சனையாக மாறும். தற்போது பாகிஸ்தான் உடனான பதற்றம் காரணமாக எல்லையில் ராணுவ பலத்தை அதிகரிப்பது அவசியமானதாக உள்ளது. இதனால் ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது.

அதன்படி நம் நாட்டில் 32 கலாட்படை பிரிவுகள் (Infantry Battalions ) உள்ளன. இதில் 14 கலாட்படை பிரிவுகளை சேர்ந்தவர்கள் நாட்டின் உள்பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ரிசர்வ் வீரர்கள் போல் இருப்பார்கள். இவர்களை ராணுவ விதியின் கீழ் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது ராணுவத்தின் உட்பிரிவுகளில் உள்ளவர்களை நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட ரெஜிமெண்ட்டில் இணைத்து கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான நிர்வாக ரீதியான மாறுதல்களை செய்யவும், நிதி செலவழிக்கவும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பதற்றம் அதிகரிக்கும்போது நாட்டின் உள்பகுதிகளில் பணியாற்றும் வீரர்கள் எல்லைக்கு செல்வார்கள். இது நம் ஆயுத படைகளின் வலிமையை கூட்டும். அதுமட்டுமின்றி இந்த நடவடிக்கையின் மூலம் எல்லையில் வாலாட்டும் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை கொடுக்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+