மொத்தமா காலி! மோடி பற்றி அவதூறு! ஒரே நாளில் மாலத்தீவில் 10,000 புக்கிங்குகளை ரத்து செய்த இந்தியர்கள்
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக மோசமான கருத்துகளையும் இந்தியர்களுக்கு எதிராக இன வெறி கருத்துகளையும் மாலத்தீவு அமைச்சர்கள் கூறியதால் இந்தியர்கள் பலரும் தங்களின் மாலத்தீவு பயணத்தை கேன்சல் செய்து வருகின்றனர்.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான மாலத்தீவு தான் இந்தியர்கள் அதிகம் விரும்பி சுற்றுலா செல்லும் நாடுகளில் ஒன்று.. திருணமான இளசுகள் ஹனிமூன் லிஸ்டில் முதலில் இருப்பது இந்த மாலத்தீவு தான்.

மாலதீவுகளைப் பொறுத்தவரையும் அங்கே சுற்றுலா வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையில் இந்தியர்கள் தான் அதிகம். சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பியிருக்கும் மாலத்தீவுக்கு இது ரொம்பவே முக்கியம்.
மோசமான கருத்து: ஆனால், மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்துக் கூறிய சில கருத்துகள் சர்ச்சையானது. பிரதமர் மோடி கடந்த வாரம் இந்தியாவுக்குச் சொந்தமான லட்சத்தீவுக்கு சென்றார். அங்கே அவர் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக லட்சத்தீவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் அவர் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். ஆனால், மாலத்தீவுக்கு போட்டியாகவே லட்சத்தீவை கொண்டு வருவதாக மாலத்தீவைச் சேர்ந்த சிலர் பதிவிட்டனர்.
முதலில் மாலதீவுகளைச் சேர்ந்த பொதுமக்களே இதுபோன்ற கருத்துகளைக் கூறினர். இருப்பினும், பிறகு மாலதீவுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் உள்ளே வந்தனர். மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியூனா, பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தார். கலைத்துறை துணை அமைச்சராக அவர் இந்தியப் பிரதமர் மோடியை 'இஸ்ரேலின் கைப்பாவை' என்று விமர்சித்தார். வேறு சில மோசமான கருத்துகளையும் அவர் கூறியிருந்தார்.
எதிர்ப்பு: அவரது இந்த ட்வீட்கள் இணையத்தில் டிரெண்டானது. மாலத்தீவைச் சேர்ந்த மேலும் இரு அமைச்சர்களும் கூட பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையிலும் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி கருத்துகளையும் கூறியிருந்தனர். பிரபல பாலிவுட் நடிகர்கள் தொடங்கி பலரும் இதை மிகக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து மரியம் ஷியூனா தனது ட்வீட்களை டெலிட் செய்துவிட்டார். இருப்பினும், அவரது ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து பலரும் அவரை விமர்சித்தனர்.
மொத்தமாக காலி: இது பெரும் சர்ச்சையான நிலையில், பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை கேன்சல் செய்து வருகின்றனர். இந்தச் சர்ச்சையால் மாலத்தீவில் இதுவரை சுமார் 10,500 ஹோட்டல் புக்கிங் கேன்சல் ஆகியுள்ளது. அதேபோல மாலத்தீவுக்குச் செல்ல புக் செய்யப்பட்டிருந்த 5,200 விமான டிக்கெட்களும் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இது மட்டுமின்றி BoycottMaldives என்ற ஹேஸ்டேகும் இணையத்தில் டிரெண்டானது.
பலரும் இந்தியாவை அவமதித்த மாலத்தீவுக்கு தங்களால் செல்ல முடியாது என்று கூறி, கேன்சல் செய்த பயணங்கள் குறித்த ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் கூட தங்கள் மாலத்தீவு பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவை அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதாக நம்பி இருக்கும் மாலத்தீவுக்கு இது உண்மையில் மிகப் பெரிய நஷ்டம் தான்.
அமைச்சர்கள் சஸ்பெண்ட்: இந்தியர்கள் மட்டுமின்றி மாலத்தீவிலும் கூட அமைச்சர்களின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்குக் கண்டனம் எழுந்தது. மாலத்தீவு முன்னாள் அதிபர் தொடங்கிப் பல முன்னாள் அமைச்சர்கள் பலரும் கூட இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், சர்ச்சை கருத்துகளைக் கூறிய அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக இப்போது அதிபராக உள்ள முகமது முய்ஸு அறிவித்துள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications