"கடும் எதிர்ப்பை மீறி! டெல்லியில்" கருணாநிதிக்கு பேனா சிலை வைத்த புதுக்கோட்டை எம்பி அப்துல்லா
புதுக்கோட்டை எம்பி அப்துல்லா தனது டெல்லி அலுவலகத்தில் வைத்துள்ள பேனா சிலை
டெல்லி: டெல்லியில் எம்பி அப்துல்லா அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சின்னம் வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய திறமையை கொண்டு மெரினா கடற்கரையில் பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அனுமதியை பெற , தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த கருத்து கேட்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், மீனவ அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூகநல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேனா சின்னத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

நாம் தமிழர்
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேனா நினைவு சின்னத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். அவர் பேசுகையில் கருணாநிதிக்கு நினைவு சின்னம் வைக்கக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. கருணாநிதியின் சமாதி அருகே வைத்துக் கொள்ளட்டும்.

கடல் மாசு
ஆனால் கடலுக்குள் வேண்டாம் என்கிறோம். பேனா சிலை வைத்தால் கடலில் மாசு ஏற்படும். கடல் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த சிலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டுவிட்டு செல்வார்கள். இது கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

திருவள்ளுவர் சிலை ஏன்
குமரி கடலில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது என்றால் அங்கு ஏற்கெனவே இருந்த பாறையில் வைக்கப்பட்டது. ஆனால் பேனா சிலையை வைக்க ஏராளமான மணல், கற்கள் கொட்டப்பட்டு அதன் மேல் சிலை வைக்கப்படுகிறது. எனவே எதிர்ப்பை மீறி பேனாவுக்கு சிலை வைத்தால் அதை உடைப்பேன் என காட்டமாக கூறியிருந்தார். இதற்காக சீமானுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

பேனா சிலைக்கு கடும் எதிர்ப்பு
அது போல் பேனா சிலைக்கு அதிமுகவும் , பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன்படி கலைஞருக்கு பேனா சிலை வைக்கட்டும், அதை அண்ணா அறிவாலயத்தில் வைக்கட்டும், யார் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் கடலுக்குள் வைப்பதைத்தான் அனைவரும் எதிர்க்கிறோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

சீமான் பேச்சு
இப்படி சிலை குறித்து பல்வேறு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சீமான் மீண்டும் ஒரு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் சிலையை உடைப்பேன் என கூறியிருந்தார். சீமான் உடைப்பாரா உடைப்பாரா என கேட்டால் நான் நிச்சயம் அந்த சிலையை உடைப்பேன், கேட்போரின் மண்டையையும் உடைப்பேன் என கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அப்துல்லா வீட்டில் பேனா சிலை
இந்த நிலையில் புதுக்கோட்டை எம்பி அப்துல்லா தனது டெல்லி அலுவலகத்தில் பேனா சிலையை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனது டில்லி அலுவலக அறையில் வைக்கும் ''கலைஞரின் பேனா'' அன்போடு அளித்தது என் நண்பன் செல்லப்பன் என குறிப்பிட்டுள்ளார். அப்துல்லாவின் இந்த செயலுக்கு பலர் வரவேற்பும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

பேனா சிலை
எல்லாரும் பயன்படுத்தும் பேனாவும் இப்படித்தான் இருக்கிறது. ஆனால் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை பார்க்கும் போது ஏதும் புதிதாக இல்லையே என நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கு அப்துல்லா எம்பி எல்லார்கிட்டயும் பேனா இருக்கும். அதுல இங்க்கும் இருக்கும். ஆனால் பேனா நல்ல பேனா என்பதைஎ எழுதி வரும் ரிசல்ட்டில்தான் தெரியும். பேனாவின் வடிவத்தால் அல்ல என தெரிவித்துள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications