"அந்த சிரிப்பு".. வேகமாக ஓடி வந்த கனிமொழி.. திகைத்து பார்த்த ஸ்டாலின்.. ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்
டெல்லி: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கு திமுக எம்பிக்கள் அவருக்கு ஏர்போர்ட்டிலேயே வரவேற்பு கொடுத்தனர்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்று இருக்கிறார். நீட் தடை, வேக்சின் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
இன்று மாலை இந்த சந்திப்பு நடக்க உள்ளது. தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

வரவேற்பு
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கு திமுக எம்பிக்கள் அவருக்கு ஏர்போர்ட்டிலேயே வரவேற்பு கொடுத்தனர். தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியாக ஏகேஎஸ் விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விஜயன், திமுக மக்களவை தலைவர் டி.ஆர் பாலு உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

கனிமொழி
திமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்பி கனிமொழியும் இன்று டெல்லி சென்று இருந்தார். திமுக எம்பி டிஆர் பாலு உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினுக்கு மரியாதை நிமித்தமாக சால்வை கொடுத்த நிலையில், கனிமொழியும் தன் பங்கிற்கு முதல்வருக்கு சால்வை கொடுத்தார். விமான நிலையத்தில் செக்கிங்கிற்கு கனிமொழி பின் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்.

வெளியே வந்தார்
கனிமொழி வெளியே வருவதற்கு முன் ஸ்டாலின் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்துவிட்டார். இதனால் பின்னால் இருந்த கனிமொழி ஓடி வந்து, சிரித்துக் கொண்டே ஸ்டாலினிடம் சால்வையை நீட்டினார். கனிமொழி திடீரென ஓடி வந்து இப்படி சால்வையை நீட்டியதை பார்த்து ஸ்டாலின் ஒரு நொடி திகைத்து போனார்.

ஸ்டாலின்
அதன்பின் ஸ்டாலின் சிரித்தபடி கனிமொழியை பார்த்து தலையசைத்துவிட்டு நகர்ந்து சென்றார். கனிமொழி இப்படி ஓடி வந்து சிரித்தபடி சால்வை கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று திமுக எம்பிக்கள் பலருடன் முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் மீட்டிங் நடத்த உள்ள நிலையில் கனிமொழியும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்.












Click it and Unblock the Notifications