டெல்லிக்கு ராஜான்னாலும்.. ஜிவாவுக்கு டாடியாச்சே.. செம க்யூட் வீடியோ!
பறக்கும் விமானத்தில் மகள் ஜிவாவுடன் எம்எஸ் தோனி விளையாடினார்
டெல்லி: என்னதான் நாம பெரிய ராஜாவாக இருந்தாலும் கூட பொண்ணுங்களுக்கு அப்பான்னு வரும்போது இறங்கிப் போய் சேவகராகத்தான் இருந்தாக வேண்டும். அதுதான் பாசம்.
குழந்தைகளுடன் இருக்கும்போது நாமும் குழந்தைகளாக மாறி விடுகிறோம். நேரு கூட உலக அளவில் மதிக்கப்பட்ட கம்பீர தலைவர்தான். ஆனாலும் குழந்தைகள் என்று வந்து விட்டால் அவர் நேரு மாமாவாக மாறி விடுகிறார்.

இப்படித்தான் நம்ம கேப்டன் தோனியும் கூட தனது மகளுடன் இருக்கும் நேரத்தில் எல்லாம் அவளாகவே மாறி விடுகிறார். அவளுடன் விளையாடுகிறார். தன்னை மறந்து போய் விடுகிறார். அப்படி ஒரு தருணத்தில் எடுக்கப்பட்ட அழகான வீடியோதான் இது. அதைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
விமானம் பறந்து போய்க் கொண்டிருக்கிறது. வெளியில் மேகக் கூட்டம் உரசிச் சென்று ஓடுகிறது. உள்ளுக்குள் அப்பாவும், மகளும். எதிரெதிர் டேபிளில். என்னவோ சொல்லி விளையாடுகிறது குழந்தை. அப்பா தோனியும் கூடவே ஆடுகிறார்.
செம ஜாலியான விளையாட்டு அது. குழந்தைகளுக்கே உரிய அந்த அழகுடன் விளையாடுகிறாள் மகள் ஜிவா. அப்பா தோனியும் சளைக்காமல் மகளுடன் சரி ஆட்டம் போடுகிறார். பார்க்கவே படு க்யூட்டாக உள்ளது.
Cutest Video on internet today 😇#msdhoni #zivadhoni pic.twitter.com/2gLucKtXGr
— Garvita #Chowkidar (@Garvita1012) May 6, 2019
இதை யாரோ வீடியோ எடுத்துள்ளனர். ஜிவாவின் மம்மியாகத்தான் இருக்கக் கூடும். அம்மாக்களுக்குத்தானே தெரியும், அப்பா - மகள் உறவின் அந்த அன்புப் புரிதல். அந்த வீடியோ இப்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
மகள்களைப் பெற்ற அப்பாக்கள் கொடுத்து வைத்தவர்கள். அதை விட மிகப் பெரிய கொடுப்பினைக்காரர்கள் யார் என்றால் அந்த மகளை விட்டுப் பிரியாமல் எப்போதும் அவளது அன்பிலேயே நனைந்து கொண்டிருப்பவர்கள். இங்கு அந்த கொடுப்பினை தோனிக்குக் கிடைத்துள்ளது. நீங்களும் ரசிச்சுச் பாருங்க இந்த அப்பா, மகள் விளையாட்டை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications