முக்குலத்தோரை ‛தேவர்’ என அழைக்ககோரி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசை கைகாட்டிய தமிழக அரசு
டெல்லி: கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோரை, தேவர் சமுதாயம் என அழைக்கும் அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்று ஆணையிட கோரிய வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழக அரசு, மத்திய அரசை கை காட்டி உள்ளது.
தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை இணைத்து முக்குலத்தோர் என அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் தான் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் தேவர் சமுதாயம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் கடந்த 1995ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
மேலும் அந்த மனுவில், ‛‛தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையோர் இணைந்த சமுதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 11.9.1995ல் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த அரசாணை என்பது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு பிரிவுகளில் உள்ளனர்.
அதாவது கள்ளர், அகமுடையோர் மற்றும் சேர்வை பிரிவினர் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும், பிரமலைக் கள்ளர், மறவர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும் இருக்கின்றனர். அதாவது ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பல பிரிவுகளாக இருக்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசின் அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்'' என தெரிவித்து இருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோரை, தேவர் என அழைக்க ஆணையிடுவதில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். இதற்கான அதிகாரம் என்பது மத்திய அரசுக்கு தான் உள்ளது. மத்திய அரசு இன்னும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசு தான் தாமதம் செய்கிறது. இந்த விவகாரத்துக்கு மத்திய அரசு மட்டுமே முழு பொறுப்பு. ஏனென்றால் இந்த விஷயத்தில் தமிழக அரசு தனியாக ஒரு முடிவு எடுக்கவோ, அறிவிப்பு வெளியிடவோ மேற்கொள்ள முடியாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications