10 சிம் கார்டுகளை வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும்! மத்திய அரசின் புதிய ரூல்ஸ்
டெல்லி: ஒரு தனிநபர் 10 சிம்கார்டுகளை வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மேலும் 10 சிம் வைத்திருப்பது குறித்து முதல் முறையாக கண்டறியப்பட்டால் ரூ 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செல்போனில் போடப்படும் சிம் கார்டுகளை வைத்து பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கு விடை கிடைக்கிறது. அதே நேரத்தில் அந்த சிம் கார்டுகள் மூலம் பல குற்றச் சம்பவங்களும் நடக்கின்றன. குற்றச் சம்பவங்களை நிகழ்த்துவோர் பல சிம் கார்டுகளை வைத்து எளிதாக தப்ப பார்க்கிறார்கள்.

அது போல் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களுக்கும் சிம் கார்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி தப்புகிறார்கள். சில அரசியல்வாதிகள், பிரபலங்கள் உள்ளிட்டோர் குற்றம் செய்துவிட்டு ஓடி ஓளியும் போது அவரது குடும்பத்தினரை வெவ்வேறு எண்களில் இருந்து அழைத்து பேசுவதால் அவர்கள் போலீஸில் சிக்காமல் தப்பிவிடும் நிலை உள்ளது.
எப்படியும் நம்ம தமிழ்நாடு போலீஸ் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவார்கள்- அது வேறு விஷயம். இது போல் சமூகவிரோத செயல்களுக்கு சிம் கார்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் அதை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
மேலும் தொலை தொடர்பு நிறுவனங்களும் சிம் கார்டை இலவசமாக கொடுக்கிறது. பல்வேறு ஆஃபர்களையும் அள்ளி கொடுப்பதால் பலர் சும்மாதானே வருது, வாங்கி போடுவோம் என செல்போன் சிம்களை வாங்கி குவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த சிம்களின் எண்கள் கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அவை தப்பி தவறி சமூகவிரோதிகளுக்கு கிடைத்துவிடுகிறது.
இந்த சிம்களைப் பயன்படுத்தி குற்றச் செயல்களை செய்யும் சமூகவிரோதிகள் சிம்கார்டை தூக்கி எறிந்து விடுகிறர்கள். இந்த நிலையில்தான் குற்றங்களை தடுக்கும் விதமாக மத்திய அரசு புது சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கொண்டு வந்துள்ள புதிய நெறிமுறைகளில் ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை மட்டுமே தனது பெயரில் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் தனது பெயரில் 10 சிம்கார்டுகளோ அல்லது அதற்கு மேற்பட்டோ வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ 50 ஆயிரம் முதல் ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். அது போல் அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றமான மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம்கார்டுகள் மட்டுமே தங்களது பெயர்களில் வைத்திருக்க முடியும் என புதிய சட்டம் சொல்கிறது.
ஒருவர் அதிகமான சிம் கார்டுகள் வைத்திருந்து முதல் முறை பிடிபட்டால் ரூ 50 ஆயிரம் அபராதம் என அறிவிக்கப்பட்டது. அது குறித்து குற்றம் தொடருமானால் அதிகபட்சமாக ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஒருவரின் ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டுகள் உபயோகப்படுத்தியது தெரியவந்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ 50 லட்சம் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
சட்டவிரோதமாக வயர்லெஸ் கருவி வைத்திருந்தாலும் மேற்கண்ட அபராதம் விதிக்கப்படும். அது போல் வணிக செய்திகளை பயனாளிகளின் அனுமதியின்றி அனுப்பினால் அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சேவைகளை வழங்க தடையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications