இந்தியாவில் கொரோனா கேஸ்கள் படுவேகமாக அதிகரிப்பு- மும்பையில் 3,671 பேருக்கு பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000-த்தை தாண்டியதாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று மட்டும் 3671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது. டெல்டா வகை, ஓமிக்ரான் வகை எனும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் சுனாமிப் பேரலை போல உலக நாடுகளை வாட்டி வதைக்கிறது.

இந்தியாவில் அதிகரித்த பாதிப்பு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,000-த்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,000 என இருந்தது. தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000த்தை தாண்டியதாக உள்ளது.

மும்பையில் பாதிப்பு அதிகம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று 3,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 371 பேர் குணமடைந்தனர். மும்பையில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 11,360. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த மே மாதத்தில் இருந்து தாராவியில் பதிவான அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது.

மே.வங்க நிலவரம்
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 2,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 1,067 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 12 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 8,776.

கேரளாவில் 64 பேருக்கு ஓமிக்ரான்
கேரளாவில் இன்று 2,423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதேநேரத்தில் கொரோனாவில் இருந்து 2879 பேர் இன்று மீண்டனர். கேரளாவில் இன்று கொரோனாவால் 15 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலத்தில் கொரோனாவுக்கு 19,835 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 64. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒடிஷாவில் மேலும் 5 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒடிஷாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications