மும்பையில் 175 பேரை பலி கொண்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ”மகனை” தூக்கிட்டாங்களாம்- செம்ம ஸ்கெட்ச்!
டெல்லி: இந்தியாவின் வர்த்தக் தலைநகரான மும்பையில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்தி 175 பேரை பலி கொண்ட சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மகனை செப்டம்பர் 26-ந் தேதி முதல் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் பல்வேறு நாசகார செயல்களின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத். ஜமாத் உல் தாவா என்ற பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர். இது இ தொய்பா என்ற இன்னொரு பயங்கரவாத இயக்கத்தின் முன்னணி அமைப்பு.

ஜம்மு காஷ்மீரை மையப்படுத்திய இந்தியாவின் பெரும்பாலான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கும் ஒட்டுமொத்த மூளையாக செயல்பட்டு வருவது ஹபீஸ் சயீத் மட்டும்தான்.
2008-ம் ஆண்டு இந்தியாவின் மும்பை மாநகரில் அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து நாட்டையே நிலைகுலையச் செய்த சம்பவத்தின் மூளையும் ஹபீஸ் சயீத்தான். மும்பை தாக்குதலில் மொத்தல் 175 பேரின் உயிரை குடித்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத், இந்தியா உள்ளிட்ட நாடுகளால் தேடப்படுகிற குற்றவாளி. சர்வதேச நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்ட பயங்கரவாதி. ஆனால் பாகிஸ்தானில் படுசுதந்திரமாக வலம் வருகிறவர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் இருந்து ஹபீஸ் சயீத் மகன் கமாலுதீன் சயீத் நேற்று முதல் காணாமல் போயிருக்கிறார். தற்போது கமாலுதீன் சயீத் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் ஹபீஸ் சயீத் தலைமையிலான பயங்கரவாத கும்பல் விழிபிதுங்கி கிடக்கிறது.

மேலும் கமாலுதீன் சயீத்தை தேடும் பணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இறக்கிவிடப்பட்டது. ஆனாலும் ஐ.எஸ்.ஐ. அமைப்பால் கமாலுதீன் சயீத் கதி என்ன என்பது தெரியவில்லையாம். கமாலுதீன் சயீத், ஸ்கெட்ச் போடப்பட்டு மர்ம நபர்களால் தூக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் ஹபீஸ் சயீத் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். ஆனால் அந்த தாக்குதல் முயற்சி வெற்றி பெறவில்லை. அத்தாக்குதல் நடத்த வந்த 3 பேர் பலியாகினர். இதனால் அத்தாக்குதலுக்கு பதிலடியாக அந்த மர்ம நபர்கள் கமாலுதீன் சயீத்தை தூக்கி இருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் எழுப்பி உள்ளன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications