"என் மகனை எதுக்கு கொலை செஞ்ச.." மனைவியை நேருக்கு நேர் சந்தித்த கணவர்.. 4 வயது குழந்தை கொலையில் பகீர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோவாவில் பெண் சிஇஓ ஒருவர் தனது மகனைக் கொலை செய்த சம்பவம் பகீர் கிளப்பிய நிலையில், அந்த பெண்ணும் அவரது கணவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.

கோவாவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் பெண் ஒருவர் தனது 4 வயது மகனைக் கொன்ற பகீர் சம்பவம் நடந்தது. அந்த பெண் பெங்களூரில் உள்ள பிரபல டெக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 Murder accused Suchana Seth confronts estranged spouse for the first time

சந்திப்பு: இதற்கிடையே நேற்று சனிக்கிழமை தனது 4 வயது மகனைக் கொன்ற சுசனா சேத்தை அவரது கணவரைச் சந்திக்க வைத்தனர். இருவரும் பிரிந்து வாழும் நிலையில், போலீஸ் அதிகாரிகள் சுசனா சேத்தை அவரது கணவரைச் சந்திக்க வைத்தனர். கொலை சம்பவத்திற்குப் பிறகு அந்த பெண் தனது கணவரைச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். விவாகரத்து வழக்கு இருவருக்கும் இடையே நடக்கும் நிலையில், சுமார் 15 நிமிடங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

கோவா போலீஸ் நிலையத்தில் இந்த மீட்டிங் நடந்துள்ளது. அப்போது இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொண்டும் திட்டிக் கொண்டும் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். கோவாவின் சர்வீஸ் அபார்ட்மெண்டில் வைத்துத் தான் சுசனா தனது 4 வயது மகனைக் கொலை செய்திருந்தார். இந்த சம்பவம் நடந்த போது அவரது கணவர் வெங்கட் வெளிநாட்டில் இருந்தார்.

என்ன நடந்து இருக்கலாம்: இந்த கொலை சம்பவம் குறித்து வெங்கட் கூறுகையில், "அவன் அப்பாவை சந்திக்க வேண்டும் என்று கூறியிருப்பான். இதனால் ஆத்திரமடைந்த சுசனா அவனைக் கொலை செய்திருப்பார்" என்றார். விவாகரத்து வழக்கு நடந்த போது தந்தை வெங்கட் தனது மகனைச் சந்திக்க நீதிமன்றம் தடை விதித்தது. அதன்படி வெங்கட் மனைவி சுசனா சேத்தின் வீட்டிற்குச் செல்லக் கூடாது. மேலும், அவரது மகனை தொலைப்பேசி உட்பட எப்படியும் தொடர்பு கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

"கசங்கி கிடந்த டிஸ்ஸு! அதை எடுத்து பார்த்ததும்.." 4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ வழக்கில் திருப்பம்

இருப்பினும், தந்தை அவரது மகனை வாரத்திற்கு ஒரு முறை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதன் காரணமாக சுசனா ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட சுசனா தனது மகனை அப்பாவைச் சந்திக்கவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் சொல்வது என்ன: 4 வயது மகன் கொல்லப்பட்ட பிறகு மனைவியை வெங்கட் நேற்று தான் முதல்முறையாகச் சந்தித்து இருந்தார். இப்போது நடந்த தவறுக்கு இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். வெங்கட் தனது மனைவியிடம் ஏன் எனது குழந்தையைக் கொன்றாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் எனக்கு மகனின் மரணம் பற்றி எதுவுமே தெரியாது எனச் சொல்லியுள்ளார்.

கோவாவில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் குழந்தையுடன் இருந்ததாகக் கூறிய அந்த பெண், அங்கே தூங்கச் செல்லும் போது குழந்தை உயிருடன் இருந்ததாகவும் தூங்கி எழுந்து பார்க்கும் போது குழந்தை உயிருடன் இல்லை என்று சுசனா சேத் கூறியுள்ளார். மற்றபடி குழந்தைக்கு என்ன ஆனது என தனக்குத் தெரியாது எனச் சொல்லியுள்ளார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் போது அவர் இதே கருத்தைக் கூறியிருந்தார். கொலைக்குப் பிறகு சுசனா சேத்தும் அவரது கணவர் வெங்கட் ராகவனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து தந்தை வெங்கட் கூறுகையில், "ஜனவரி 7 ஆம் தேதி குழந்தையைச் சந்திக்க வரும்படி சுசனா சேத் கூறியிருந்தார். நானும் அவர் சொன்ன இடத்திற்குச் சென்று காத்திருந்தேன். ஆனால், அவர் வரவில்லை. அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், எந்த பதிலும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+