15 ஆண்டு விசாரணை ரொம்ப லேட்.. கொலைகாரர்கள் ஆயுள் முழுக்க துடிக்க, ஆயுள் தண்டனை கொடுங்க: சவுமியா தாய்
டெல்லி: பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ள 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அவரது தாய் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆங்கில தொலைக்காட்சி பெண் பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த வாரம் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே நேற்று 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு அளித்து உள்ளார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமார் ஆகிய 4 பேர் குற்றவாளிகள் என அவர் தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் அக்டோபர் 26 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஒன் இந்தியாவுக்கு, சௌமியா விஸ்வநாதனின் தாய் மாதவி விஸ்வநாதன் பேட்டி அளித்து இருக்கிறார். அதில், தன்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி கிடைப்பதற்காக 15 ஆண்டுகளாக தான் நடத்திய சட்டப் போராட்டத்தையும், தன்னுடைய குடும்பம் சந்தித்த சோதனைகளையும் அவர் தெரிவித்து உள்ளார். தானும் தன்னுடைய குடும்பமும் பல்வேறு துயரங்களை அனுபவித்ததாக அவர் கூறி இருக்கிறார்.
அவர் பேசுகையில், "இது மிக மிக தாமதம். காலத்தை கணக்கிட்டால் இதற்கு 15 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை மிக மிகவும் அதிக காலத்தை எடுத்து உள்ளனர். எங்கள் எதிர்காலம் என்ன ஆகும் என்ற மன உளைச்சலில் இருந்தோம். என் மகளின் மறைவுக்கு பிறகு மகிழ்ச்சியே மறைந்துவிட்டது. ஆனாலும், டெல்லியின் சாலைகளில் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியர்களை குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

அக்டோபர் 26 ஆம் தேதி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்று தெரியவில்லை. மோகா சட்டத்தின் கீழ் அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படலாம். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என நம்புகிறோம். ஏனெனில் நாங்களும் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறோம். தாங்கள் செய்த குற்றத்துக்கான தண்டனையை அவர்கள் பெற வேண்டும். இந்த 15 ஆண்டுகால சட்டப்போராட்டத்தால் குடும்பமே சோகத்தில் முடங்கிவிட்டது. அமைதியாக இருப்பதாக காட்ட நினைத்தால் துக்கம் அதை மறைத்தது.
எங்களின் சோகமான நாட்களில் சௌமியாவின் நண்பர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். நைரோபியில் உள்ள எனது மூத்த மகள் என்னை விட இந்த தீர்ப்பை அதிகளவில் எதிர்பார்த்து காத்திருந்தார். என் மகள் நம்பிக்கை குறைவாக இருந்தார். அவர் இதற்காக நைரோபியில் இருந்து டெல்லி வர விரும்பினார். ஆனால், அங்கு அவரது மகனை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் வர முடியவில்லை. எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவால் வலிமையாக உணர்ந்தோம்.
நாங்கள் தினம் தினம் வாழ்கிறோம். அவ்வளவுதான். என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. நாங்கள் இதுபோன்ற சம்பவங்களை கண்டு அஞ்சுகிறோம். அவர்கள் உயர்நீதிமன்றத்துக்கு நிச்சயம் செல்வார்கள் என்று எனக்கு தெரியும். நாங்களும் அங்கு செல்ல வேண்டும். 15 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமான காலம். இந்த தீர்ப்பிற்கு காரணமான குற்றத்தை மக்கள் மறந்து இருப்பார்கள். இதுதான் இப்போது பிரச்சனையாக உள்ளது." என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications