இந்தியாவில் உயர்கல்வியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சரிவு! எஸ்சி, எஸ்டி மக்களை விட மோசம்.. பரபர சர்வே
டெல்லி: இந்தியாவில் உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிடர் (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி) பிரிவை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இஸ்லாமிய மாணவர்களின் எண்ணிக்கை என்பது சரிந்துள்ளது சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கல்வி சார்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சகம் பல்வேறு சர்வேக்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் ஏஐஎஸ்எச்இ (AISHE) எனும் உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2020-21ம் ஆண்டுக்கான ஆய்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் திடுக்கிட வைக்கும் தகவலும், ஆறுதலான தகவலும் வெளியாகி உள்ளது. இந்த ஏஐஎஸ்எச்இ ஆய்வில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் பின்வருமாறு:
2019-20ம் ஆண்டை ஒப்பிடும்போது 2020-21 கணக்கெடுப்பில் இந்தியாவில் உயர் கல்வியை பொறுத்தமட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்தோர் உயர்கல்வி பயில்வது அதிகரித்துள்ளது. அதன்படி ஆதிதிராவிட மக்களில் 4.2 சதவீதமும், பழங்குடியின மக்களில் 11.9 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களில் 4 சதவீதம் வரையும் உயர்கல்வி பயில்வது அதிகரித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் 50 சதவீதம் பேர் இரு பிரிவை சேர்ந்தவர்களாக உள்ளனர். அதாவது உயர்கல்வியில் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் 36 சதவீதமாகவும், ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர்கள் 14 சதவீதமாக உள்ளனர். மாறாக இஸ்லாமிய மாணவர்கள் உயர்கல்வி பயில்வது என்பது இந்தியாவில் குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கொரோனா பரவல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
கொரோனா பரவலால் 12ம் வகுப்பு பிறகு பலரும் தங்களின் உயர்கல்வியை கைவிட்டு வேலைக்கு சென்றது தான் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை என்பது உயர்கல்வியில் குறைந்ததற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சர்வேயின் படி இஸ்லாமிய மாணவர்கள் உயர்கல்வி பயில்வது என்பது 8 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட காலத்தில் 12ம் வகுப்பை முடித்து உயர் கல்விக்காக கல்லூரி சென்றவர்களின் எண்ணிக்கை வெறும் ஒரு லட்சத்து 79 ஆயிரமாக மட்டுமே உள்ளது.
குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் 36 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 26 சதவீதம், மகாராஷ்ட்டிராவில் 8.5 சதவீதம், தமிழகத்தில் 8.1 சதவீதம் என்ற அளவில் இஸ்லாமிய மாணவர்கள் உயர் கல்வி பயிலும் விகிதம் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது சரிந்துள்ளது. மாறாக கேரளாவில் மட்டுமே இஸ்லாமிய மாணவர்களின் உயர் கல்வி சதவீதம் என்பது சிறப்பாக உள்ளது. கேரளாவில் 43 சதவீதம் என்ற அளவில் இஸ்லாமிய மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர்.
மேலும் இன்னொரு ஆச்சரியமான விஷயமும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.அதாவது இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோரில் ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயர் கல்வி பயில்கிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதோடு பிற சிறுபான்மை மதங்களிலும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் உயர்கல்வி பயில்வது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய மக்கள் தொகையில் தற்போது இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 14 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஆனால் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை என்பது 4.6 சதவீதம் என குறைந்து காணப்படுகிறது. மேலும் இஸ்லாமியர்கள் ஆசிரியர்களாக இருப்பதும் குறைந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆசிரியர்களில் பொதுப்பிரிவை சேர்ந்த 56 சதவீதம் பேரும், ஓபிசி பிரிவை சேர்ந்த 32 சதவீதம் பேரும், எஸ்சி பிரிவை சேர்ந்த 9 சதவீதம் பேரும், எஸ்டி பிரிவை சேர்ந்த 2.5 சதவீதமும் பேரும் உள்ளனர். ஆசிரியர்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை என்பது வெறும் 5.6 சதவீதமாக தான் உள்ளது.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications