முஸ்லிம் மாணவர்கள் "சூரிய நமஸ்காரம்" செய்யக்கூடாது .. இஸ்லாமிய அமைப்பு உத்தரவு.. வரிந்து கட்டிவந்த பாஜக
சூரிய நமஸ்காரம் முஸ்லிம் மாணவர்கள் செய்யக்கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
டெல்லி: இஸ்லாமிய மாணவர்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்க கூடாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.. சூரிய வழிபாடு இஸ்லாத்தில் கிடையாது, எனவே, இது போன்ற நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது.. இதற்கு பாஜக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை சூரியநமஸ்காரம் மேற்கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை வெளியிட்டது.2
இதன் மூலம் ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 30,000 கல்வி நிறுவனங்களில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சூரிய நமஸ்காரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

சூரிய நமஸ்காரம்
ஆனால், பல்கலைக்கழக மானிய குழுவின் இந்த சூரிய நமஸ்கார உத்தரவுக்கு எதிர்ப்ப்புகள் கிளம்பி உள்ளன.. முதலாவதாக, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இந்த உத்தரவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது... அந்த ஆணையத்தின் பொதுச்செயலாளர் மவுலானா கலீத் ரஹ்மானி இது தொடர்பாக சொல்லும்போது, "சூரிய வழிபாடு என்பது இஸ்லாத்தில் கிடையாது.. அதனால், இது போன்ற நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது...

முஸ்லிம்கள்
பெரும்பான்மையினரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மற்றவர்கள் மீது திணிக்க அரசு முயற்சி செய்கிறது.. இது அரசியலமைப்புக்கு எதிரானது... அரசாங்கம் உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.. நாட்டில் மதச்சார்பற்ற மதிப்புகளை வளர்க்க வேண்டும், இத்தகைய உத்தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக, பணவீக்கம் வேலையின்மை போன்ற உண்மையான பிரச்சினைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தனிநபர் சட்ட வாரியம்
ஆனால், இதற்கு பாஜக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது.. குறிப்பாக உபி பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், இதை பற்றி சொல்லும்போது, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்த விஷயத்தை அரசியலாக்க முனைகிறது.. உடல் நலத்துடன் தொடர்புடைய யோகாவுக்கு உலக அளவில் அங்கீகாரம் அளித்து இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் பிரதமர் மோடி..

முஸ்லிம்கள்
மத்திய கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகள் உட்பட அனைத்து உலக நாடுகளும் யோகாவையும் அதன் அங்கமான சூரிய நமஸ்காரத்தையும் அங்கீகரித்துள்ளது... அப்படி இருக்கும்போது, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்க்கிறது.. எதிர்வரும் தேர்தல் காரணமாகவே அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் காங்கிரஸ் கட்சியின் ஒலி பெருக்கியாக மாறியுள்ளதாக தெரிகிறது.. எனவே, இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications