ஆரம்பித்தது அட்டூழியம்.. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்.. ம.பி.யில்
டெல்லி: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக பரவிய வதந்தியையடுத்து, ஒரு பெண் உட்பட 3 முஸ்லீம்கள், பசு பாதுகாப்பு குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள், "ஜெய் ஸ்ரீராம்" என்று, கோஷமிடச் சொல்லி தாக்கியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சியோனி என்றபகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. அதில் கையில் கம்பு வைத்துள்ள சில இளைஞர்கள் மாட்டிறைச்சி வைத்துள்ளதாக 4 பேரை அடித்து உதைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த காட்சியை அப்பகுதியில் போகிறவர்கள் நின்று வேடிக்கை பார்க்கிறார்களே தவிர, தடுக்க யாருக்கும் தைரியம் வரவில்லை. இந்த தாக்குதலில் பெண்ணும் தப்பவில்லை என்பது பெரிய சோகமாகும்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஸ்ரீராமசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அதில் ஒருவர், போபால் பாஜக எம்பியான பெண் சாமியார் சாத்வி பிரக்யாவுடன் புகைப்படம் ஒன்றில் காணப்பட்டவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதனிடையே சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. மோடி கடந்த முறை, ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவின் பல பகுதிகளில் பசு குண்டர்கள் இதுபோல தாக்குதல்களை நடத்தி வந்தனர். இப்போது மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications