பாஜக எனும் வாஷிங் மெஷினில் விழுந்ததால் மட்டுமே புனிதமான ஊழல் பெருச்சாளிகள் லிஸ்ட் இது!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவில் ஐக்கியமாகிவிட்ட காரணத்தாலே சிபிஐ, அமலாக்கப் பிரிவு ரெய்டுகளில் தப்பித்த அரசியல் பெரும்புள்ளிகள் பலர். இப்படியான பல மாநிலங்களைச் சேர்ந்த சில ஊழல் பெருந்தலைகளின் பட்டியல் இங்கே.
பாஜகவில் இணைந்து புனிதமாகிப் போன அரசியல் தலைகள்:

நாராயண் ரானே: இன்றைய மத்திய அமைச்சர். இவரது அரசியல் பூர்வோத்திரம் சிவசேனா. பின்னர் காங்கிரஸ்... கடைசியாக தனி கட்சி. மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர். ரூ300 கோடி ஊழலில் சிக்கிய காரணத்தால் தூக்கத்தை இழந்தார். ஒரேவழி சொந்த கட்சியை அப்படியே பாஜகவிடம் கொடுத்துவிட்டு இன்று பாஜக தலைவர்களில் ஒருவர்- மத்திய அமைச்சர்.
சுவேந்து அதிகாரி: இவரும் காங்கிரஸை பூர்வோத்திரமாக கொண்டவர்; மத்திய அமைச்சராகவும் இருந்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜியின் தளபதியாக இருந்தவர். இன்று பரம எதிரி. மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற நாரதா ஊழல் வழக்கில் சிக்கியவர். அப்புறம் என்ன பாஜகவுக்கு தாவினார். இப்போது எந்த கேஸும் இல்லை. எல்லாம் சுபிட்சம். மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சித் தலைவர்.
ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா: வடகிழக்கு மாநிலங்களில் பாஜக முகம் அல்லது முகவர். அஸ்ஸாம் மாநில முதல்வர். இன்றைய பாஜகவின் பிரசார பீரங்கி. இவருக்கும் பூர்வோத்திரம் காங்கிரஸ்தான். இவர் மீது நீண்ட காலம் பாஜக ஆகப் பெரும் ஊழல் மோசடி புகார்களை குற்றப்பத்திரிகையாகவே வாசித்தது. அதுவும் மத்திய அமைச்சர் அமித்ஷாவால் மிக மோசமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்தான் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா. அப்புறம் என்ன பாஜகவில் இணைந்தார். இப்போது பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநில முதல்வர்.
பாவனா காவ்லி: ஒருகாலத்தில் சிவசேனாவின் டெல்லி முகங்களில் ஒருவர். எத்தனை அமலாக்கப் பிரிவு சம்மன் வந்தாலும் லெப்ட் ஹேண்டில் டீல் செய்தவர். நாடாளுமன்றத்தில் லோக்சபா சிவசேனா கொறடாவாகவும் இருந்தவர். அன்னிய செலாவணி வழக்கில் அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டவர். அப்புறம் என்ன சுபமுகூர்த்த வேளையில் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியில் இணைந்து பாஜகவுக்காக குரல் கொடுக்கிறவராகிவிட்டார்.
பிஎஸ் எடியூரப்பா: கர்நாடகா மாஜி முதல்வர். கர்நாடகா பாஜக முகம். பாஜகவுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுப்பார்; தனிக்கட்சி தொடங்குவார். இப்போது எல்லாம் பாஜகவை விட்டு என்ன நடந்தாலும் வெளியே போகமாட்டார். ஏனெனில் சிக்கியிருப்பது அத்தனை ஊழல் வழக்குகளில். பாஜகவுக்கும் இவரது சப்போர்ட் தேவை. அதனால் பாஜக மேலிடத்தின் பெருந்தலைகளில் ஒருவராக திகழ்கிறார்.












Click it and Unblock the Notifications