சரித்திர சம்பவம்..குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற ஒரே 'சிட்டிங் பிரதமர்' நரேந்திர மோடி மட்டும்!
டெல்லி: இந்தியாவின் சரித்திரத்தில் சிட்டிங் பிரதமர் ஒருவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்று 'சரித்திரத்தில்' இடம்பிடித்துள்ளார் நரேந்திர மோடி.
நாட்டின் முதல் லோக்சபா தேர்தல் 1952-ல் நடைபெற்றது. நேரு முதல் நரேந்திர மோடி வரை பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர். ஒவ்வொருவரும் தேர்தல் களத்தில் பல்வேறு சரித்திரங்களைப் படைத்திருக்கின்றனர்.

1984-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட ராஜீவ் காந்தி 72.38% வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றார். ராஜீவ் காந்தியின் தாத்தா ஜவஹர்லால் நேரு கூட அதிகபட்சமாக 33.46% வாக்கு வித்தியாசத்தில்தான் வென்றிருந்தார். ராஜீவ் காந்தியின் தாயார் இந்திரா காந்தி அம்மையாரும் அதிகபட்சமாக 35.24% வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றிருந்தார்.
1991-ம் ஆண்டு காபந்து (இடைக்கால ) பிரதமராக இருந்த சந்திரசேகர் மிக மிக குறைவாக 12.78% வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார்.
அதேநேரத்தில் பதவியில் இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட்ட பிரதமர்களிலேயே மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றது நரேந்திர மோடிதான் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் புள்ளி விவரம். 1991-ல் நரசிம்மராவ் 13.56% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுதான் இதுவரை 'குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்' சாதனையாக இருந்தது.
நாட்டின் பிரதமர்கள்- தேர்தலில் போட்டியிட்ட ஆண்டு- பெற்ற வாக்கு சதவீதம்
| ராஜீவ் காந்தி | 1984 | 72.38% |
| ராஜீவ் காந்தி | 1989 | 50.22% |
| நரேந்திர மோடி | 2019 | 45.22% |
| இந்திரா காந்தி | 1971 | 40.47% |
| வாஜ்பாய் | 2004 | 37.4% |
| இந்திரா காந்தி | 1967 | 35.24% |
| ஜவஹர்லால் நேரு | 1962 | 33.46% |
| சரண் சிங் | 1980 | 33.33% |
| நரசிம்மராவ் | 1996 | 30.97% |
| ஜவஹர்லால் நேரு | 1957 | 21.88% |
| ஜவஹர்லால் நேரு | 1952 | 19.49% |
| வாஜ்பாய் | 1999 | 16.4% |
| நரசிம்மராவ் | 1991 | 13.56% |
| நரேந்திர மோடி | 2024 | 13.49% |
(நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்)












Click it and Unblock the Notifications