தேர்தல் வெற்றிக்கு பிறகு எதிர்பார்த்த மாதிரியே வெறும் "மோடியான" பிரதமர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டுவிட்டரில் நரேந்திர மோடி சவுக்கிதார் என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்.

ரபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி சூடான விவாதத்தை நடத்தினார். அப்போது மோடியை திருடன் என ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.

Narendra Modi removes the Word Chowkidar in his twitter

ஊழலுக்கு எதிராக போராடும் அனைவரும் நாட்டின் பாதுகாவலர்களே என ஒரு பேரணியில் பிரதமர் மோடி பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து டுவிட்டர் கணக்கில் தனது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார்.

சவுக்கிதார் என்றால் பாதுகாவலன் என்று அர்த்தம். இதையடுத்து அமித்ஷா, அருண் ஜேட்லி, பியூஷ் கோயல், எச் ராஜா, தமிழிசை உள்ளிட்டோர் பெரும்பாலான பாஜக தலைவர்களும் தங்கள் டுவிட்டர் கணக்கில் சவுக்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டனர்.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக தனிபெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து தனது டுவிட்டரில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என பதிவிட்டிருந்தார்.

அப்போது சவுக்கிதார் என்ற வார்த்தையை நீக்கிவிட்டார். சவுக்கிதார் என்ற வார்த்தை டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதே தவிர என் ஒரு பகுதியாக மக்களின் பாதுகாவலனாகவே செயல்படுவேன். நாட்டை காக்கும் முனைப்புடன் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+