மோடி vs நிதின் கட்கரி.. பாஜகவிற்குள் எழுந்த புயல்! ஆர்எஸ்எஸ் சப்போர்ட் "அவருக்காமே".. பெரிய ட்விஸ்ட்
டெல்லி: பிரதமர் மோடி மற்றும் சில டாப் தலைவர்களுக்கு இடையிலான மோதல் பாரதிய ஜனதா கட்சிக்குள் ஏற்பட்டு உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக யோகி ஆதித்யநாத், நிதின் கட்கரி மற்றும் சிலர் பிரதமர் மோடி மீது அப்செட்டில் இருப்பதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கியமாக பாஜகவில் மோடி-ஷா மற்றும் நிதின் கட்கரிக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடு உள்ளதாக பாஜக தேசிய வட்டாரங்களும், தி வயர் ஊடகம் எழுதி உள்ள கட்டுரை ஒன்றும் தெரிவித்து உள்ளது.

கட்காரிக்கும், மோடி-ஷாவுக்கும் இடையேயான மோதல் என்பது ரகசியம் இல்லை.. அது வெளிப்படையான விஷயம்தான் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டி ஒன்றில், "கட்காரியை தோற்கடிக்க மோடி, ஷா மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் செயல்படுகின்றனர். இவர்கள் மூவரை தவிர பாஜகவில் மற்ற எல்லோரும் ஓரம்கட்டப்பட்டு உள்ளனர். முக்கியமாக தனக்கு போட்டியாக கருதும் நபர்களை மோடி ஓரம்கட்டி வருகிறார்" என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
சஞ்சய் ராவத் தெரிவித்தது போலவேதான் பாஜகவில் கடுமையான உட்கட்சி மோதல் இருப்பதாக தி வயர் ஊடகம் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.
நிதின் கட்கரியை தோல்வி அடைய செய்ய தீவிரமான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. நிதின் கட்காரியை தோல்வி அடைய செய்ய அமித் ஷா - மோடியே பணிகளை செய்தனர். முக்கியமாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிதின் கட்கரியை தோல்வி அடைய வைக்க பணத்தை செலவு செய்துள்ளதாகவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.
நாக்பூரில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் கட்கரிக்கு அங்கே பாஜக தலைவர்களே தேர்தல் பணிகளை செய்யவில்லை. பாஜகவின் பொதுக்கூட்டங்களில் அவர் இல்லை. மோடி நடத்திய கூட்டங்களில் அவர் இல்லை. நாக்பூரில் பாஜகவின் பெரும்பாலான பிரச்சார சுவரொட்டிகளில் அவரின் புகைப்படமே இல்லை.
ஒதுக்கிய மோடி: முக்கியமாக கட்கரி தேசிய பிரச்சாரங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். 2019 தேர்தலில் கட்கரி பாஜகவின் ஸ்டார் பிரச்சாரக்காரராக இருந்தார். ஆனால் இப்போது அது மாறிவிட்டது. இப்போது அவரை மோடி, ஷா ஆகியோர் ஓரம்கட்டிவிட்டனர் என்று தேசிய பாஜக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கட்கரி நீண்ட காலமாக மோடி-ஷா ரேடாரின் கீழ்தான் இருந்தார். கட்கரியின் ஒவ்வொரு அசைவுகளையும் மோடி கவனித்து வந்தார். ஏனெனில் கட்கரிதான் மோடியை மாற்ற முடியும். இவரை காலி செய்யவே சிஏஜி மூலம் நெடுஞ்சாலை துறை ஊழல் கொண்டு வரப்பட்டது. பாஜக ஆட்சியில் சிஏஜி இப்படி எல்லாம் ஊழல் புகார் சொல்லிவிட்டு சுதந்திரமாக இருக்க முடியாது. ஆனால் அதை மீறி சிஏஜி சொல்கிறது என்றால்.. அது கட்கரிக்கு எதிரான பாஜகவின் படுபயங்கர பிளான்தான்.. மோடி அனுமதியுடன் கட்கரிக்கு எதிரான ஊழல் ரகசியங்கள் வெளியே வந்தன என்று கூறப்பட்டு உள்ளது.
2018லேயே இவர்களுக்கு இடையில் மோதல் வந்துவிட்டது.. அப்போதே நிதின் கட்கரி பேட்டி ஒன்றில், பிரதமர் மோடியையும், பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவையும் தாக்கும் வகையில் பேசி இருந்தார். வெற்றி என்றால் கட்சியில் சிலர் கொண்டாடுகிறார்கள். தோல்வி என்றால் காணாமல் போய் விடுகிறார்கள். தோல்விக்கு இவர்கள் பொறுப்பேற்பதே இல்லை என்று கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
அப்போதே.. நிதின் கட்கரி நேரடியாகவே அமித் ஷாவிற்கு எதிராக பேசினார். தேர்தல் தோல்விக்கு கட்சியின் தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும். பாஜகவின் எம்.பி, எம்எல்ஏ சரியாக செயலாற்றவில்லை என்றால் அதற்கும் பாஜகவின் தேசிய தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என்று நேரடியாக அமித் ஷா குறித்து விமர்சனம் வைத்து இருந்தார்.
மோடி ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு: அதோடு மோடியை விரும்பாத ஆர்எஸ்எஸ் தீவிர ஆர்எஸ்எஸ் நிர்வாகியான கட்கரியை வளர்த்துவிடுவதற்கான பணிகளையும் செய்கிறதாம். பாஜக பெரும்பான்மை பெறாமல் என்டிஏ ஆட்சி அமைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் கட்கரியை பிரதமராக்கவும் ஆர்எஸ்எஸ் காய் நகர்த்தி வருகிறதாம்.
ஆர்எஸ்எஸ் ஆதரவு ஏன்?: கட்கரி அரசியல் தாண்டி சிறந்த பிஸ்னஸ் மேன் வேறு. கட்காரி ஆர்எஸ்எஸ்ஸின் "பைனான்ஸ்" தூண் மற்றும் கருவூலமாகவும் இருந்து வருகிறாராம் . அவர் மீதான தாக்குதல் ஆர்எஸ்எஸ்ஸின் பொருளாதாரம் மீதான நேரடித் தாக்குதல் என்று பலர் நம்புகிறார்கள். கட்கரிக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையே வலுவான நிதி தொடர்புகள் உள்ளன என்பதால் மோடி - கட்கரி இடையிலான மோதலில் ஆர்எஸ்எஸ் கட்கரி பக்கம் நிற்க முடிவு செய்துள்ளதாம்.
ஆர்எஸ்எஸ் திட்டம் என்ன?: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத பட்சத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜக ஆட்சியில் கடுமையான தலையீடுகளை செய்யும் என்று அந்த அமைப்பின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பாஜக தனியாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.. என்டிஏ ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக ஆர்எஸ்எஸ் நம்புகிறதாம். என்டிஏ ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாஜகவிற்குள் பல உள் வேலைகளை பார்க்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாம்.
ஏன் மோடி வேண்டாம்: ஏற்கனவே குஜராத்தில் பாஜகவிற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் சரியாக பணிகளை செய்யவில்லை. அப்படி இருக்கத்தான் ஆர்எஸ்எஸ் தரப்பை குஷிப்படுத்த மோடி தனது பிரச்சார யுக்தியை மாற்ற தொடங்கினார். உதாரணமாக இஸ்லாமியர்களை தாக்கி கடுமையாக பேசினார். சில மேடைகளில் இஸ்லாமிய இடஒதுக்கீடு, தாலி பறிப்பு பற்றி எல்லாம் மோடி பேசினார். இதெல்லாம் தேர்தலில் பணிகளை செய்யாத ஆர்எஸ்எஸ் தலைவர்களை உற்சாகப்படுத்த மோடி களமிறங்கிய யுக்தி என்று கூறப்பட்டது.
ஆனால் ஆர்எஸ்எஸ் எதற்கும் தலை அசைக்கவில்லை. பாஜக தேர்தல்களில் வெற்றிபெற முக்கிய காரணம் பாஜக பிரச்சாரம் + ஆர்எஸ்எஸ் நடத்தும் லோக்கல் பிரச்சாரம். ஆனால் உத்தர பிரதேசத்தில் இந்த முறை பாஜகவிற்கு ஆதரவாக களப்பணிகளை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் செய்யாமல் போக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்த காரணங்களை இங்கே பார்க்கலாம்.
ஆர்எஸ்எஸ் தரப்பு மோடியின் தனிப்பட்ட வளர்ச்சியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவின் ஆர்எஸ்எஸ் குரல் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பாஜகவில் எப்போதும் வாய்ஸ் இருக்கும். அது மோடி வருகையால் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் முடிவுகளை மோடி - அமித் ஷா இருவரும் கேட்பது இல்லை. இருவரும் சுயமான முடிவுகளை எடுக்கின்றனர். இப்போது வேட்பாளர் தேர்வில் கூட ஆர்எஸ்எஸ் குரல் கேட்பது இல்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அப்செட் ஆகி உள்ளது. இது களப்பிரச்சாரத்திலும் சுணக்கம் ஏற்பட காரணம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications