எல்லாம் பொய்... நம்பாதீங்க! நீட் பிஜி தேர்வு ஒத்திவைப்பு என வெளியான தகவலுக்கு என்.பி.இ. மறுப்பு
டெல்லி: இந்த ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வு தேதியை தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக வெளியான சுற்றறிக்கை உண்மையானது அல்ல என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மே 21 ஆம் தேதி நீட் பிஜி தேர்வு
கடும் எதிர்ப்புகளுக்கு இந்த ஆண்டு இளங்கலை நீட் தேர்வு வருகிற ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதேபோல் முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தி இளங்கலை மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதினர்.

மாணவர்கள் குமுறல்
2021 ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான அனைத்து இந்திய கலந்தாய்வும் 2022 முதுகலை நீட் தேர்வும் ஒரே நேரத்தில் நடப்பது நடுத்தர மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாதிக்கும் என்பது மாணவர்களின் கருத்தாக உள்ளது. முதுகலை நீட் தேர்வுக்கு தயாராகி வரும் தங்களின் சுமையை உணர்ந்து தேர்வு தேதியை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடைவெளி தேவை
அதேபோல், 2021 ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான அனைத்து இந்திய கலந்தாய்வு நடைபெறும் நாளுக்கும் 2022 முதுகலை நீட் தேர்வு நடக்கும் நாட்களுக்கும் இடையே போதிய இடைவெளியை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது மக்களுக்காக பணியாற்றிய தங்கள் கோரிக்கை ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினர்.

ட்விட்டரில் டிரெண்டான ஹேஷ்டேக்குகள்
இதுகுறித்த தங்களின் கோரிக்கைகளை என்ற ஹேஷ்டேக்கை #POSTPONENEETPG_MODIJI ட்விட்டரில் டிரெண்ட் செய்த மாணவர்கள், தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநருக்கு தங்கள் கோரிக்கைகள் சென்றடையும் வகையில் அவரது ட்விட்டர் கணக்கையும் இந்த பதிவுகளில் டேக் செய்து வருகின்றனர். மாணவர்களின் இந்த கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்.பி.இ மறுப்பு
இந்த நிலையில் நீட் பிஜி தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில் ஒரு சுற்றறிக்கை பரவியது. அதில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 9 ஆம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை மறுத்துள்ள தேசிய தேர்வு வாரியம் திட்டமிட்டபடி முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications