நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கப் பிரிவு முன்பாக 2-வது முறையாக இன்று சோனியா காந்தி ஆஜர்!
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று மீண்டும் ஆஜராகி உள்ளார். அவருடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் சென்றனர். சோனியா காந்தியிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று டெல்லியில் தொடர் போராட்டத்தை நடத்த உள்ளது.
Recommended Video
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை. நாடு விடுதலைக்கு முன்னரே அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நேரு தொடங்கி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்புடன் இந்த பத்திரிகையை நேரு தொடங்கினார். இப்பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது.

பங்கு பரிமாற்றம் வழக்கு
2010-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. அதன் பங்குதாரர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அப்போது அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டது. இக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவனப் பங்குகள் சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வருமான வரி துறை வழக்குப் பதிவு செய்து அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

ராகுலிடம் விசாரணை
இந்நிலையில் இந்த பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. ராகுல் காந்தியிடம் ஏற்கனவே பல மணிநேரங்கள் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு விசாரித்தது. அப்போது இந்த விசாரணைக்கு எதிராக டெல்லி மற்றும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர்.

சோனியா இன்று ஆஜர்
இதனைத் தொடர்ந்து சோனியா காந்தியும் சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக ஆஜராகினார். அவரிடம் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் வெளியேயும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று சோனியா காந்தியிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக ஆஜராக மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் அமலாக்கப் பிரிவு அலுவலகம் சென்றார் சோனியா காந்தி.

காங். இன்று போராட்டம்
சோனியாவிடம் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்ரு வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது காங்கிரஸ். அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications