சோனியா - ராகுலுக்கு சிக்கல்.. முதல் முறையாக குற்றப்பத்திரிகை.. நேஷனல் ஹெரால்டு வழக்கில் ED அதிரடி
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக முதல் முறையாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு சம்பந்தமாக சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய ரூ.661 கோடி சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கலாகி உள்ளது. இது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோர் உள்ளனர். இவர்கள் மீது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம் சார்ந்த மோசடி வழக்கை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சிபிஐ முதலில் விசாரித்தது. அதன்பிறகு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் அமலாக்கத்துறை என்ட்ரி கொடுத்தது. மேலும் கடந்த 2021ம் ஆண்டில் இந்த வழக்கை விசாரிக்க டெல்லி பட்டியாலா மெட்ரோபாலிட்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
குற்றப்பத்திரிகை
இந்த அனுமதியை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பெரும் போராட்டத்தை நடத்தினர். இப்படியான சூழலில் தான் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை என்பது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வரும் 25ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் இன்று குற்றப்பத்திரிகை என்பது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா ஆகியோரின் பெயர்கள் என்பது சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகை இதுவாகும். இந்த குற்றப்பத்திரிகை மீது விரைவில் விசாரணை தொடங்கும். இந்த விசாரணைக்கு பிறகு சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி குற்றம் செய்து இருப்பின் தண்டனை என்பது வழங்கப்படும்.
வழக்கின் பின்னணி என்ன?
நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம் மூலம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை தொடங்கினார். இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் வழங்கியது. அதோடு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் மூடப்பட்டது. இதற்கிடையே தான் கடந்த 2014ம் ஆண்டு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் சட்டவிரோதமாக ‛யங் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர். இதனால் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர்'' என கூறினார். இந்த வழக்கு விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.
சொத்துகள் பறிமுதல்
மேலும் ரூ.988 கோடி மதிப்பிலான சொத்துகளில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்த நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தொடர்புடைய சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் அமலாக்கத்துறை தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு சோனியா - ராகுல் காந்தியின் பெயரில் 76 சதவீத பங்குகள் உள்ள ‛யங் இந்தியா' நிறுவனத்தின் சொத்துகள் டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ளன. இதனால் 3 நகரங்களில் உள்ள ரூ.661 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் அடுத்தக்கட்டமாக அமலாக்கத்துறை சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
மருமகனுக்கு சிக்கல்
முன்னதாக இன்று சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரரியுமான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஹரியானாவில் நடந்த ரியல் எஸ்டேட் டீல் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இப்போது சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோர் மீது நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது சோனியா காந்தியின் குடும்பத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications