சிபி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா சொன்ன வாழ்த்து.. ஜனாதிபதி முர்மு தந்த சிறப்பான பாராட்டு
சென்னை: நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் இருப்பார் என்று மோடி தன்னுடைய வாழ்த்துப்பதிவில் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு பயனளிக்கும். வெற்றிகரமான பதவிக்காலத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜனாதிபதி முர்முவும் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
இந்திய குடியரசு துணைத்தலைவர் தேர்தல் இன்று காலை ஆரம்பமானது.. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் (67), தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமானவர் களமிறங்கினார்.
ராதாகிருஷ்ணன் முன்னிலை
இந்தியா கூட்டணி சார்பில் பி. சுதர்சன் ரெட்டி (79), தெலங்கானாவை சேர்ந்த சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதியும் போட்டியிட்டனர்.. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது.. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.. இதில் முதலிலிருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணனே முன்னனியில் இருந்தார்.

மொத்தம் 767 உறுப்பினர்கள் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வாக்களித்த நிலையில், சி.பி. ராதாகிருஷ்ணன் 452 முதல் விருப்பு வாக்குகளை பெற்றார்... சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையே பெற்றிருந்தார்.. இறுதியில் 152 ஓட்டு வித்தியாசத்தில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, சிபி ராதாகிருஷ்ணன் நம்முடைய நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குவியும் வாழ்த்துக்கள்
துணை ஜனாதிபதியாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்துகூறியிருக்கிறார்.. தன்னுடைய வாழ்த்தில், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுகள். பொது வாழ்க்கையில் உள்ள நீண்ட அனுபவம் , நாட்டின் வளர்ச்சிக்கு பயனளிக்கும். வெற்றிகரமான பதவிக்காலத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பாராட்டியிருக்கிறார்.
அதேபோல ராதாகிருஷ்ஷனுக்கு பிரதமர் மோடியும் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளார்... இது குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
அதிகாரம் வாழ்க்கை
"2025 துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவரது வாழ்க்கை எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்..
மூத்த தலைவர் அமித்ஷா
அதேபோல மூத்த தலைவர் அமித் ஷா தன்னுடைய வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.. தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்...
சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து எழுந்த ஒரு தலைவராக உங்கள் நுண்ணறிவும், நிர்வாகத்தைப் பற்றிய ஆழமான அறிவும், நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சிறந்ததை வெளிப்படுத்தி ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்.
அவையின் புனிதத்தின் பாதுகாவலராக உங்கள் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications