முதல்வர்களில் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் டாப் 82.96% பேர் ஆதரவு..அப்ப எடப்பாடிக்கு எவ்வளவு செல்வாக்கு?
டெல்லி: நாட்டிலேயே ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் சிறப்பாக செயல்படுவதாக அம்மாநில மக்கள் அமோக வாக்களித்துள்ளனர் என்கிறது சி வோட்டர் கருத்து கணிப்பு.
பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் செயல்பாடு தொடர்பாக சி வோட்டர் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் பிரதமர் மோடிக்கு 65% மக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில முதல்வர்களில் ஒடிஷாவின் நவீன்பட்நாயக்குக்கு 82.96% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹரியானா முதல்வர் கட்டாருக்கு வெறும் 4.47% மக்கள்தான் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். நாடு முழுவதிலுமிருந்து 3,000 பேரிடம் இந்த கருத்து கணிப்பை சி வோட்டர் நடத்தியது.
சி வோட்டர் கருத்து கணிப்பின்படி இந்திய அளவில் மக்களின் அமோக ஆதரவு பெற்ற 8 முதல்வர்களின் விவரம்:
நவீன்பட்நாயக் (ஒடிஷா)- 82.96% ; பூபேஷ் பாகல் (சத்தீஸ்கர்) - 81.06%; பினராஜி விஜயன் (கேரளா)- 80.28%; ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா) 78.01%
உத்தவ் தாக்கரே (மகாராஷ்டிரா) 76.52%; அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி) - 74.18% ; ஜெய்ராம் தாகூர்( இமாச்சல்)- 73.96%; எடியூரப்பா (கர்நாடகா) 67.21
தமிழக முதல்வர் எடப்பாடி

மக்களின் அதிருப்தியைப் பெற்ற முதல்வர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 41.28% பேர்தான் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications