ஜம்மு காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் பாதுகாக்கிறது! வார்த்தையை விட்ட பரூக் அப்துல்லா! பாஜக கடும் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மன்றத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்புவதால், காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் காப்பாற்றுகிறது என்று பரூக் அப்துல்லா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரூக் அப்துல்லாவின் பேச்சு தேசத்துரோகம், என்றும் அவர் பாகிஸ்தானுக்கு செல்லலாம் எனவும் பாஜக காட்டமாக விமர்சித்துள்ளது. பரூக் அப்துல்லாவின் இந்த பேச்சால் பாஜகவுக்கும் தேசிய மாநாட்டு கட்சிக்கும் வார்த்தை யுத்தம் வலுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக உமர் அப்துல்லா உள்ளார். இவரது தந்தை பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். மத்திய அமைச்சராகவும் இவர் இருந்துள்ளார்.

Farooq Abdullah claimed Pakistan protecting people of Jammu and Kashmir bJP Hitsback

பரூக் அப்துல்லா, தனது கட்சியினர் மத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, பரூக் அப்துல்லா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பரூக் அப்துல்லா கூறியதாவது:- "ஜம்மு காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் பாதுகாக்கிறது. உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவே இந்தியா அமைதியாக உள்ளது. நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) செல்லும் இடமெல்லாம் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை எனக் கூறி வருகிறது.

அவர்கள் நம்மை பாதுகாக்கிறார்கள். இல்லையென்றால், அவர்களின் (இந்தியா) நோக்கம் சரியானதாக இல்லை. டெல்லியிடம் இருந்து எதை எதிர்பார்க்க முடியும். அவர்கள் உங்களுக்கு நீதி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? போராடுவதற்கான தைரியம் கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் துடைத்தெறியப்படுவீர்கள், உங்கள் அடையாளமும் மறைந்துவிடும்" என்றார்.

இந்தியாவை மட்டம் தட்டும் விதமாகவும் பாகிஸ்தானே காஷ்மீரிகளை பாதுகாக்கிறது என்ற தொனியில் பரூக் அப்துல்லா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பரூக் அப்துல்லாவின் இந்த பேச்சை கையில் எடுத்துள்ள பாஜக, அவரது இந்த பேச்சு தேசத்துரோகம் என்று விமர்சித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாஜக தலைவராக உள்ள சாத் ஷர்மா, பரூக் அப்துல்லா தனது பேச்சுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து இதுபோல, பரூக் அப்துல்லா பேசுவார் என்றால் அவர் பாகிஸ்தானுக்கு செல்வதே சிறந்தது என்றும் தான் நினைத்ததை பேசும் சுதந்திரத்தை அவருக்கு இந்த நாடுதான் வழங்கியுள்ளது. அந்த சுதந்திரம் காரணமாகவே அவர் இதுபோன்று பேச முடிகிறது. பாகிஸ்தானில் இப்படியான ஒரு கருத்தை நீங்கள் பேச முடியுமா? இதே கருத்துகளை நீங்கள் பாகிஸ்தானில் தெரிவித்திருந்தால், நீங்கள் தப்பியிருக்க முடியாது.

இதுபோன்ற கருத்துகளை பாஜக ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. இந்தியாவில் முஸ்லீம்கள் பாதுகாப்பாக உள்ளனர். துரோகிகள் அதிகாரத்திற்கு வந்தாலும், அவர்கள் தங்கள் துரோகத்தைக் கைவிடுவதில்லை. இந்தியாவில் வாழ்ந்துகொண்டு பாகிஸ்தானைப் புகழ்ந்து பேசுகிறார்கள். காஷ்மீர் பாதுகாப்பாக இருப்பது பாகிஸ்தானால் தானா, அல்லது பாகிஸ்தானுக்கு இந்தியாவின் வலிமையைக் காட்டுவதன் மூலமா?" என்று கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+