நாட்டின் சிறந்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடி தான்.. ஆனால்.. என்டிடிவி வெளியிட்ட சர்வே
டெல்லி: லோக்நிதி-சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டி (சிஎஸ்டிஎஸ்) உடன் இணைந்து என்டிடிவி நாட்டின் பிரபலமான தலைவர்கள் யார் என்பது குறித்து மக்களின் கருத்து என்ன எனறு கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் இந்தியாவின் மிகவும் பிரபலமான தலைவராகவும், நாட்டின் உயர் பதவியான பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி சரியான நபராக உள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இந்த மாதம் ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரப்போகிறது. அதற்கு முன்பு மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற போகிறத. இந்நிலையில் பொதுமக்களின் மனநிலையை மதிப்பிட இந்த சர்வே மூலம் என்டிடிவி முயற்சித்தது. கர்நாடக தேர்தலில் ஆளும் பாஜக காங்கிரஸிடம் தோல்வியடைந்ததை அடுத்து, மே 10 முதல் 19 வரை 19 மாநிலங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டது. லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் 71 தொகுதிகளில் 7,202 பேரிடம் கணக்கெடுப்பை மேற்கொண்டது.

இந்த சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் கர்நாடகாவில் தோல்வியடைந்தாலும், பாஜகவுக்கு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், பிரதமர் மோடியின் புகழ் வலுவாக உள்ளது . பாஜகவின் கட்சியின் வாக்கு சதவீதம் சீராக உள்ளது. சர்வேயில் பதிலளித்தவர்களில் சுமார் 43% பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றிபெற வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேநேரம் 38% பேர் பாஜக ஆட்சியை ஏற்கவில்லை என்று கூறியுள்ளனர். இன்று தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று கிட்டத்தட்ட 40% பேர் கூறியுள்ளனர். காங்கிரஸுக்கு 29% பேர் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.
இந்த சர்வேயில், பாஜகவின் வாக்கு சதவீதம் 2019 (37%) இலிருந்து 2023 (39%) ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸின் - 2019 இல் 19% முதல் 2023 இல் 29% ஆக உயர்ந்துள்ளது.
சர்வேயில் பதிலளித்தவர்களில் 43 சதவீதம் பேர் இன்று தேர்தல் நடந்தால், நரேந்திர மோடி தான் பிரதமராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேநேரம் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று 27 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.
பிரதமர் போட்டியில் இவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் 4% ஆதரவே பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவ் (3%), நிதிஷ் குமார் (1%) உள்ளனர்.

2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளை ஒப்பிடும் போது, பிரதமர் மோடிக்கு (44 முதல் 43%) ஓரளவு சரிவையும், ராகுல் காந்திக்கு (24 முதல் 27%) அதிகரிப்பையும் காட்டுகிறது. ஆனால், பதிலளித்தவர்களில் 40 சதவீதம் பேர் மோடியே பிரதமாக வர வேண்டும் என்று கூறினர்.
பிரதமர் மோடியை அவரது பேச்சாற்றலால் 25 சதவீதம் பேரால்வ மிகவும் விரும்பப்படுகிறார். பதிலளித்தவர்களில் 20% பேர் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பிரதமராக அவரை விரும்புவதாகவும், 13% பேர் அவர் கடின உழைப்பாளி என்பதால் பிரதமரை விரும்புவதாகவும் கூறியுள்ளனர். சுமார் 11% பேர் அவருடைய கொள்கைகளைப் பாராட்டியுள்ளனர்.
2024ல் பிரதமர் மோடிக்கு யார் சவாலாக இருப்பார்கள் என்று சர்வேயில் பதிலளித்தவர்களிடம் கேட்கப்பட்டது. 34% பேர் ராகுல் காந்தி என்றும், 11% பேர் அரவிந்த் கெஜ்ரிவால் என்றும் கூறியுள்ளனர். அகிலேஷ் யாதவ் (5%) மற்றும் மம்தா பானர்ஜி (4%) என்றும் சிலர் கூறினர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 9 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு சவாலாக யாருமே இல்லை என்றுகூறினர்.
ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, 26% பேர் "எப்போதும் அவரை விரும்புவதாக" கூறியுள்ளனர், 15% பேர் பாரத் ஜோடோ யாத்ராவிற்குப் பிறகு விரும்புவதாக கூறினர். 16% பேர் ராகுலை பிடிக்கவில்லை என்றும், 27% பேர் ராகுல் அலட்சியமாக உள்ளார் என்றும் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications