100 புத்த துறவிகளுக்கு கொரோனா.. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமான புத்த மடாலயம்.. சிக்கிமில் செம ஷாக்
டெல்லி: சிக்கிம் மாநிலத்துள்ள புத்த மடாலயங்களில் சுமார் 100 புத்த துறவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையில் தப்பிய இடங்களிலும்கூட வைரஸ் பரவலின் 2ஆம் அலை தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிக்கம் மாநிலத்துள்ள புத்த மடாலயங்களில் சுமார் 100 புத்த துறவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்திலுள்ள உலக பாரம்பரிய தளமான ரும்தேக் மடாலயத்தில் உள்ள தர்ம சக்ரா மையத்திலிருந்து 37 துறவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அதேபோல அங்குள்ள குஞ்சாங் மடாலயத்தில் 61க்கும் மேற்பட்ட துறவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தற்போது சரம்சா கார்டன் தனிமைப்படுத்தும் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து துணை நிலை மாஜிஸ்திரேட் ராபின் சேவா கூறுகையில், "சுமார் 100 துறவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மடாலயம் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட துறவிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்கிறோம்" என்றார்.
சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிக்கிமில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு தற்போது 3,317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications