3 ஆண்டில் 4 லட்சம் பேரா? குடியுரிமையை கைவிட்ட இந்தியர்கள் - கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டனில் சிட்டிசன்
டெல்லி: இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற சுமார் 4 லட்சம் பேர் இந்திய குடியுரிமை துறந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்.
ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக செல்லும் இந்தியர்கள் பலர் அங்கேயே தங்கி குடியுரிமை பெற்றுவிடுகின்றனர்.
இவ்வாறு வெளிநாடுகளில் குடியுரிமை பெறுபவர்கள் இந்தியா குடியுரிமையை துறந்து விடுகின்றனர்.

மத்திய அமைச்சர் அறிக்கை
இந்த நிலையில் கடந்த 2019, 2020 மற்றும் 2021 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் எத்தனை இந்தியர்கள் குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் விபரம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, எழுத்துப்பூர்வமான பதிலை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் நாடுகள் வாரியாக பட்டியலிட்டு மக்களவையில் வெளியிட்டு இருக்கிறார்.

சுமார் 4 லட்சம் பேர்
அதில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 1,44,017 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாகவும், கடந்த 2020 ஆம் ஆண்டில் 85,256 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டு இருப்பதாகவும், கடந்த 2021 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இந்த எண்ணிக்கை இரு மடங்காகி 1,63,370 பேர் இந்திய குடியுரிமையை துறந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நாடுகள் வாரியாக விளக்கம்
இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் அதிகமாக இருந்ததால் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரிகிறது. மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் வெளியிட்டு இருக்கும் பட்டியலில் எந்தெந்த ஆண்டுகளில் எந்தெந்த நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமை துறந்தார்கள் என்றும், எந்தெந்த நாடுகளிடம் குடியுரிமையை பெற்றார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது,

கனடா முதலிடம்
அதில் அதிகபட்சமாக கனடாவில் கடந்த 3 ஆண்டுகளில் 64,071 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்று உள்ளார்கள். அதேபோல் ஆஸ்திரேலியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 58,391 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்று இருக்கின்றனர். அடுத்தபடியாக பிரிட்டனில் கடந்த 3 ஆண்டுகளில் 35,435 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்று உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள்
இத்தாலியில் 12,131 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்று உள்ளார்கள். நியூசிலாந்தில் 8,882 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளனர். ஜெர்மனியில் 6,690 பேர் இந்திய குடியுரிமையை துறந்து ஜெர்மனி, இத்தாலி, போர்சுகல் நாட்டின் குடியுரிமையை பெற்று உள்ளார்கள். நெதர்லாந்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4,128 பேர் இந்திய குடியுரிமையை துறந்து அந்நாட்டின் குடியுரிமையை பெற்று இருக்கின்றனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications