மத்திய அரசு சொன்ன வார்த்தை.. செப்.5 போராட்டத்தை வாபஸ் பெற்ற கரப்பான் பூச்சி கட்சி! என்ன நடந்தது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கடந்த மாதம் நடந்த நீட் முறைகேடு போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் நடக்கவிருந்த பேரணியை கைவிடுவதாக கரப்பான் பூச்சி கட்சி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அப்போது மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று போராடுவோர் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது! இருப்பினும், பேச்சுவார்த்தையில் அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா கேட் முதல் டெல்லி காவல்துறை தலைமையகம் வரை பேரணி நடத்த கரப்பான் பூச்சி கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

Cockroach janata party

மத்திய அரசு

இதில் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதனிடையே அரசியலமைப்பு சட்டத்தின் 142வது பிரிவை பயன்படுத்தி வழக்குகளை ரத்து செய்யக் கோரி மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. நேற்றைய தினம் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் உறுதி அளித்ததை தொடர்ந்து செப்டம்பர் 5 பேரணியை கைவிட கரப்பான் பூச்சி கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கு பதிய மாட்டோம்

உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நீட் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எந்த எஃப்ஐஆர்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்படாது என்று உறுதி அளித்தார். மேலும், அந்த காலகட்டத்தில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக இனி புதிய வழக்குகளும் பதிவு செய்யப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

கோரிக்கை

மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார். இதை நீதிமன்றம் ஏற்று வழக்குகளை ரத்து செய்தது. அதன் பிறகே போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி கட்சி அறிவித்தது.

போராட்டம் வாபஸ்

இது தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ், "போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்தின் நடைமுறைகளை உருவாக்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதனால் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பேரணியை வாபஸ் பெறுகிறோம்" என்று கூறியிருந்தார்.

இதனிடையே கரப்பான் பூச்சி கட்சி தனது பேரணியை வாபஸ் பெற்ற முடிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வரவேற்றுள்ளார். ஜூலை மாதம் போராட்டக்காரர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நட்டா தலைமையிலேயே நடந்தது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக நட்டா தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அப்போது உறுதி அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+