நீட் மறுதேர்வில் சலுகைகள்.. கூடுதல் நிமிடம் டூ தேர்வு மையம் மாற்றம் வரை.. மத்திய அமைச்சர் அறிவிப்பு
டெல்லி: வினாத்தாள் கசிவால் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடத்தப்படும் என்று இன்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நீட் மறுதேர்வையொட்டி 15 நிமிடங்கள் வரை கூடுதல் சலுகை, தேர்வு மையத்தை மாற்றி கொள்வது உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மே 3ம் தேதி அமைதியாக நீட் தேர்வு நடந்து முடிந்தது. ஆனால் மே 7-ம் தேதியில் வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனில் விளையாட மத்திய அரசு விரும்பவில்லை. பணம் பலம் படைத்த ஒருவர் தகுதியான மாணவ-மாணவர்களுக்கு மருத்துவ இடத்தை பறிப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21ல் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.
நீட் தேர்வு ரத்து காரணமாக தேசிய தேர்வு முகமை 2 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி மாணவ-மாணவிகளின் தேர்வு கட்டணத்தை மீண்டும் திரும்ப வழங்குவது என்றும் ஜூன் 21ல் நடக்கும் நீட் தேர்வை கட்டணமின்றி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் மாணவம-மாணவிகள் தாங்கள் விரும்பும் தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இவர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களை தேர்வு செய்ய ஒருவாரம் வரை காலஅவகாசம் வழங்கப்பட உள்ளது. இதற்கான முழுவிவரம் இன்று மாலையில் வெளியிடப்படும்.
அதேபோல் வழக்கத்தை விட இந்த நீட் மறுதேர்வில் கூடுதலாக 15 நிமிடங்கள் மாணவ-மாணவிகளுக்குவழங்கப்படும். இந்த கூடுதல் நிமிடங்கள் என்பது ஓஎம்ஆர் ஷிட்டில் விவரங்களை குறிப்பிட வழங்கப்படும். இந்த மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 14ம் தேதி வெளியாகும்'' என்று கூறியுள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications