தம்பிதுரை VS திருச்சி சிவா.. ராஜ்யசபாவில் மோதிய அதிமுக - திமுக எம்பிக்கள்! சமாதானப்படுத்திய துணை தலைவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த வேளையில் ராஜ்யசபாவில் அதிமுக எம்பி தம்பிதுரை, திமுக எம்பி திருச்சி சிவா இடையே கருத்து மோதல் வெடித்தது. இதையடுத்து ராஜ்யசபா துணை தலைவர் துணை தலைவர் ஹரிவன்ஷ் தலையீடு செய்து அரசியல் மோதலை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்று கூறி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். வினாத்தாள் கசிவுக்கு எதிராக மத்திய அரசு விரைவு நீதிமன்றம் அமைப்பதாகவும், தண்டனையை அதிகப்படுத்துவதாகவும் கூறியது.

neet-row-aiadmk-thambidurai-dmk-mp-trichy-siva-clashes-in-rajya-sabha

இதனை செயல்பாட்டுக்கும் கொண்டு வரும் வகையில் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026 தயாரிக்கப்பட்டது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் லோக்சபாவிலும், நேற்று ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மீது நேற்று ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. அதிமுக ராஜ்யசபா எம்பி தம்பிதுரை பேசினார். அப்போது தம்பிதுரை எம்பி கூறுகையில், ''தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைவதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான். அப்போது மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தபோதுதான் இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசியல் ஆதாயத்திற்காக நீட் தேர்வை எதிர்ப்பது போல் நாடகமாடுகிறார்கள்" என திமுகவை சீண்டினார்.

இதனால் திமுக எம்பி திருச்சி சிவா கடும் கோபமடைந்தார். ''வரலாற்று உண்மைகளைத் திரித்துப் பேசக்கூடாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்ட போது அதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், அதன்பின்னர் வந்த பாஜக அரசு தான் சட்டத் திருத்தம் கொண்டுவந்து நீட் தேர்வை கட்டாயமாக்கியது. அதிமுக அரசும் விலக்கு பெற முடியாமல் கையெழுத்திட்டது'' என்று கொந்தளித்தார். இதனால் நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவிலும் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம் நடந்தது.

இதையடுத்து ராஜ்யசபாவின் துணை தலைவர் ஹரிவன்ஷ் குறுக்கிட்டு, "மசோதா தொடர்பான விஷயங்களை மட்டும் பேசுங்கள். மாநில அரசியலை இங்கு விவாதிக்க வேண்டாம்" எனக் கூறி இருவரையும் அமைதிப்படுத்தினார். இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து திருச்சி சிவா பேசுகையில், ''நுழைவு தேர்வுகளில் மோசடிகளை தடுக்கும் மசோதாவால் எந்த பயனும் இருக்கப்போவது இல்லை. இதில் எந்த பயனும் இல்லை.

மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்படும்போது வினாத்தாள் கசியலாம். நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை நினைத்து பார்க்க வேண்டும். தேர்வு ரத்தாகும்போது மாணவர்களின் மனநிலையை பாருங்கள். ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு கல்வி பாடத்திட்டங்கள் உள்ளன. நாட்டில் பாகுபாடு நிலவி வருகிறது.

இதனால் நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். கல்வி என்பது தான் நாட்டை மாற்றும் சக்திவாய்ந்த ஆயுதம். அரசின் பிடிவாதத்தால் 124 பேரின் உயிர்கள் பறிபோய் உள்ளது.2026ம் ஆண்டில் மட்டும்24 பேர் இறந்துள்ளனர். சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் பேசும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தினற்கு வர மறுக்கிறார். இந்த மசோதா என்பது வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வினாத்தாள் கசிவை தடுக்காது '' என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+