இந்த வருடம்.. ஒரே ஒரு முறைதான் நீட் தேர்வு நடத்தப்படும்.. மத்திய அமைச்சர் திட்டவட்டம்
டெல்லி: நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக லோக்சபாவில் பாஜக எம்.பி லல்லு சிங் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அந்த பதிலில், மத்திய கல்வித்துறையின் கீழ் வரும் தேசியத் தேர்வு முகமை மூலம், நாடு முழுவதும் மருத்துவ பட்டபடிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஆலோசனையுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தப்படும். ஒரே ஆண்டில் பல முறை நடத்தப்படுவதாக முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படுகிறது நீட் தேர்வு. இவ்வாண்டு வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடத்தப்படும் என்று முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 13 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறத் தொடங்கியதும், தேர்வுக்கான பாடத்திட்டம், வயது உள்ளிட்ட தகுதிகள், இட ஒதுக்கீடு, தேர்வு கட்டணம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications