நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7-ல் வெளியாகிறது! ஆக.30-க்குள் ஆன்சர் கீ வெளியீடு!
டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாகிறது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17-ந் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் 16 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி உள்ளனர்.
இந்நுழைவுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வு முடிவுகளுக்கு முன்னதாக நீட் தேர்வின் ஆன்சர் கீ ஆன்லைனில் வெளியாகும் என எதிர்பார்க்கவும்பட்டது.
இந்த நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியத் தேர்வுகள் முகமை இதனை அறிவித்துள்ளது. மேலும் ஆன்சர் கீ ஆன்லைனில் ஆகஸ்ட் 30-ந் தேதிக்குள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை காண https://neet.nta.nic.in/
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகள் தொடங்கும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications