NEET UG 2023: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ஆன்லைன் பதிவு தொடக்கம்! ஏப்.6 கடைசி நாள்!
நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
டெல்லி: இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு NEET UG 2023-க்கு நேற்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 6-ந் தேதி வரை நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆகையால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மாநிலத்தின் கோரிக்கை. இதற்கான சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இதனை வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நடப்பு 2023-ம் ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதலே மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பின்னர் நீண்ட எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆன்லைனில் நீட் தேர்வுக்காக மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கினர். நீட் தேர்வுக்கு ஏப்ரல் 6-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் நீட் தேர்வுகள் மே 7-ந் தேதி நடத்தப்பட உள்ளன.
இணையதளத்தில் கொடுக்கப்பட்ட
NEET(UG) 2023 Registration
என்ற லிங்க்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications