NEET UG 2023: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்?
நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம்.
டெல்லி: இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு NEET UG 2023-க்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்கிற அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆகையால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மாநிலத்தின் கோரிக்கை. இதற்கான சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இதனை வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நடப்பு 2023-ம் ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்பது எதிர்பார்ப்பு. இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. நாடு முழுவதும் நீட் தேர்வுகள் மே 7-ந் தேதி நடத்தப்பட உள்ளன.
நீட் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://nta.ac.in/ இணையதளத்தில் வெளியாகும். அதில் நீட் விண்ணப்பத்துக்கான ஆன்லைன் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications