ஜனவரி 19 முதல் நீட் இளநிலை மருத்துவ கலந்தாய்வு.. அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு வரும் ஜனவரி 19இல் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நீட் நுழைவுத்தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த. செப் மாதம் நீட் தேர்வும் நடைபெற்றது.

NEET-UG counselling to begin from January 19, announces Health Minister Mansukh Mandaviya

அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், கொரோனா பெருந்தொற்று காரணமாக நீட் கலந்தாய்வைத் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இளநிலை நீட் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு வரும் ஜனவரி 19இல் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான முழு அட்டவணையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

முதுநிலை படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு நேற்று (ஜன. 12) முதல் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+