டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் முதுநிலைத் தேர்வு... உச்சநீதிமன்ற தீர்ப்பு... அரசு நீதி வழங்க வேண்டும் - ராகுல்காந்தி ட்வீட்

எழுத்து தேர்வை தள்ளி வைக்க சொல்லிய மாணவர்களின் கோரிக்கை நியாயமானது என்று ராகுல்காந்தி. கொரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் உழைத்தார்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் உழைத்தார்கள்; அரசு நீதி வழங்க வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். எழுத்து தேர்வை தள்ளி வைக்க சொல்லிய மாணவர்களின் கோரிக்கை நியாயமானது என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Recommended Video

    நீட் முதுகலை தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது - உச்சநீதிமன்றம்!

    வருகிற மே 21 ம் தேதி நீட் முதுகலை தேர்வு நடைபெற உள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் இத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    NEETPG2022: If you do not find what you are looking for then just ask says Rahul Gadhi

    முதுகலை நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அத்துடன் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையத்தளங்களில் மட்டும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த சூழலில் முதுகலை நீட் நுழைவுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

    2021 - 2022 ஆண்டுக்கான நீட் முதுகலை கலந்தாய்வே இன்னும் முடியவில்லை அதற்குள் மே 21ம் தேதி முதுகலை நீட் நுழைவுத்தேர்வு எப்படி நடத்த முடியும்? என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , தேர்வு நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் தற்போது எப்படி தள்ளி வைக்க முடியும்? லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் தேர்வை தள்ளி வைக்க முடியாது .

    ஏழைகளுக்கான ஆட்சியை காங்கிரஸ் மட்டுமே வழங்குகிறது! சிலிண்டர் விலை உயர்வு பற்றி ராகுல்காந்தி ட்விட் ஏழைகளுக்கான ஆட்சியை காங்கிரஸ் மட்டுமே வழங்குகிறது! சிலிண்டர் விலை உயர்வு பற்றி ராகுல்காந்தி ட்விட்

    2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால், தேர்வு ஒத்தி வைத்தால் குழப்பம் , பாதிப்பு ஏற்படும். எனவே முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மே 21ஆம் தேதி திட்டமிட்டபடி முதுகலை நீட் தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

    இதனிடையே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து டிவிட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில்; NEET PG கவுன்சிலிங் தாமதத்திற்கு மாணவர்கள் காரணம் இல்லை. எழுத்து தேர்வை தள்ளி வைக்க சொல்லிய மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கொரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் உழைத்தார்கள்; அரசு நீதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Rahul Gandhi tweets about NEETPG2021: (ராகுல்காந்த் ட்வீட் நீட் முதுநிலைத் தேர்வு) The counselor on NEETPG2021 is the Client Convener. Focus on the navigation of the navigation of NEETPG2022. If you do not find what you are looking for then just ask. For those who are a little tired of the stereo-typed name, this is the place to be.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X