யார் இந்தியை திணித்தது? ஸ்டாலின் செய்வது ப்ளாக்மெயில்! நிதி இல்லையா? கொந்தளித்த தர்மேந்திர பிரதான்
டெல்லி: தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ளார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த முன்னர் ஒப்புக்கொண்டு, தற்போது அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார் மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான். அவரது பேச்சுக்கு தமிழகம் முழுவது பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது.

இதை அடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ளார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது தொடர்பாக என்டிடிவிக்கு பேட்டி அளித்துள்ள தர்மேந்திர பிரதான், மு.க.ஸ்டாலினும் திமுகவும் சொந்த அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை தடுத்து வருகின்றனர்.
மும்மொழிக் கல்வி தொடர்பாக பேசும் போது தேவையில்லாமல் ஒரு அரசியல் நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு பற்றி பேசுகிறார்கள். எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலும் எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் திணிப்பதாக தேசிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு எங்குமே குறிப்பிடவில்லை. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நான் கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழ்நாடு தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தான் படிப்போம் என கூறுவது சரிதான்.
ஆனால் வேலைவாய்ப்பு உள்ளிட்டவத்திற்காக கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி அல்லது ஒடியா மொழியை கற்க விரும்பும் மாநிலத்தின் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் துரோகம் செய்கின்றனர். உலகமயமாக்கல் தற்போது அதிகமாக இருக்கும் நிலையில் ஏராளமான தமிழர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து வருகிறார்கள். 1960 களில் இருந்தது போல இன்று நிலைமை இல்லை. ஆனால் தேசிய கல்விக் கொள்கை விஷயத்தில் இந்திய எதிர்ப்பு என இவர்கள் விவாதத்தை துரதிஷ்டவசமாக மாற்றி விட்டனர்.
அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் தான். தமிழ் நாகரீகத்தில் பழமையான மொழி. இதனை பிரதமர் நரேந்திர மோடியே கூறியிருக்கிறார். தொழில் கல்வியை பொது கல்வியுடன் ஒருங்கிணைக்கும் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு 2000 கோடிக்கு மேல் நிதி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பிளாக் மெயில் மற்றும் வற்புறுத்தல் போன்றது இது. போன்ற இழிவான வார்த்தைகளை பயன்படுத்துவது ஜனநாயகத்தில் கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு இந்திய திணிக்கப் போகிறது என்ற பயத்தை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியை யார் திணிக்க போகிறார்கள்? நான் ஒடியா மொழி பேசும் நபர். எனது மாநிலத்திலும் கூட மும்மொழி கொள்கை இருக்கிறது. பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்திற்கும் இதுதான் நடக்கிறது மூன்றாவது மொழியாக ஹிந்தி எங்குமே திணிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டம் நிறுத்தப்படவில்லை பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மேலும் 2000 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications