எங்கள் நாட்டு இறையாண்மையை மதிக்க வேண்டும்.. நேபாளத்திற்கு இந்தியா கண்டனம்.. தொடரும் உரசல்
டெல்லி: இந்திய நிலப்பரப்புகளை தங்கள் எல்லையில் சேர்த்து நேபாள அரசு அட்டகாசம் செய்துள்ளது. இதற்கு அந்தந்த நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால் இதனை ஏற்க முடியாது என்று இந்தியா இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலை ஒன்றை இந்தியா இம்மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது. இது சீனாவை கோபப்படுத்தியதோடு, நேபாளமும் திடீரென கோபத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.
தங்கள் நாட்டு எல்லை வழியாக இந்த சாலை செல்வதாக நேபாளம் கூறினாலும், இது தவறான தகவல் என இந்தியா தெரிவித்தது. இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவுடன், சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கிய, புதிய தேசிய வரைபடத்தை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய வரைபடம்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகியவை. இதை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நேபாள பிரதமர் கருத்து
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய நேபாள பிரதமர் இந்தியாவை சீண்டும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நேபாளத்தில் குடியேற்றியவர்களால், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாகவும், சீனா, இத்தாலி போன்ற நாட்டு வைரஸ்கள் எவ்வளவோ பரவாயில்லை. இந்திய வைரஸ்தான் நேபாளத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மோசமான கருத்தை தெரிவித்திருந்தார்.

ஒருதலைபட்சம்
இந்த நிலையில் இன்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் நேபாளம் நாடு உருவாகியுள்ள புதிய வரைபடம் இந்தியாவின் பகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது. எந்த ஒரு வரலாற்று ஆதாரமும், பின்புலமும் இல்லாமல் இப்படி ஒரு ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை நேபாள அரசு எடுத்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம்
இந்தியாவின் இறையாண்மையை நேபாளம் மதிக்க வேண்டும். பிராந்திய ஒருங்கிணைப்பை பேண வேண்டும், என்று அந்த நாட்டு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications