Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேபாளத்தில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு.. உருக்கமான தகவல்

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாளத்தில் தமிழகத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மனகாமனா கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது கோர்காவில் நடந்த விபத்தில் முத்துகுமார், அண்ணாமலை, மீனாட்சி, விஜயா, மீனா, தமிழரசி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது நடந்துள்ள இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Nepal tour bus accident 7 Tamil Nadu Pilgrims Killed After Temple Visit

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய மலைப்பிரதேச நாடான நேபாளத்தில் பழங்கால கோயில்கள் பல உள்ளன. இந்தியாவில் இருந்து சுற்றுலாவிற்காகவும், ஆன்மீக பயணமாகவும் ஆயிரக்கணக்கானோர் தினமும் நேபாளம் சென்று விட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 12 க்கும் மேற்பட்டவர்கள் நேபாளத்திற்கு ஆன்மிக பயணமாக சென்றுள்ளனர். அங்குள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு பேருந்தில் திரும்பியுள்ளனர். நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் பேருந்து வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.

தமிழ்நாடு பயணிகள் 7 பேர் பலி

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். பயணிகள் கூக்குரல் கேட்டு உடனடியாக மீட்பு குழுவினருக்கு அவ்வழியாக வந்தவர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் பலியாகியுள்ளனர். பலியான 7 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த விபத்து தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் கூறியதாவது:- தன்ஹுன் மாவட்டத்தில் இருந்து அன்புகைரேனி நோக்கி மைக்ரோ பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. மனகாம்னா கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பி கொண்டு இருந்த போது பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. ஆன்மிக பயணத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பும் போது இந்த விபத்து நேரிட்டதா அல்லது வேறு கோயிலுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்களா? என்பது பற்றிய விவரம்தெரியவில்லை.

விபத்துக்கான காரணம் என்ன?

விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. விபத்தில் சிக்கிய பேருந்து மின்சாரத்தில் ஓடக்கூடியது. ஆபத்தான வளைவில் பேருந்து திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளது" என்று தெரிவித்த்தனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவை சேர்ந்த பயணிகள் ஆன்மிக பயணமாக நேபாளம் சென்றுவிட்டு திரும்பும் போது அவர்கள் வந்த பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் 27 பேர் பலியாகினர். மலைப்பகுதிகள் ஆபத்தான சாலைகள் காரணமாக அதிக அளவில் விபத்து நடைபெறும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் நேபாளத்தில் 7,699 விபத்துகளும் இதன் மூலம் 190 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என்று அங்குள்ள தரவுகள் கூறுகின்றன.

பலியானவர்கள் குறித்து உருக்கமான தகவல்கள்

விபத்தில் பலியானவர்கள் குறித்த உருக்கமான தகவல் கிடைத்துள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 55). பொள்ளாச்சியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் முத்துக்குமார் தனது மனைவி மீனா மற்றும் பொள்ளாச்சி சிடிசி காலனியைச் சேர்ந்த பாபு என்பவருடன் சேர்ந்து கடந்த 7-ம் தேதி ஆன்மிக பயணமாக வட இந்தியா சென்றுள்ளனர்.

சென்னையில் இருந்து ரயில் மூலமாக 13 நாட்கள் ஆன்மிக பயணமாக சென்றுள்ளனர். அயோத்தி, முக்திநாத், கோத்ரா ஆகிய பகுதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்த இவர்கள் நேபாளத்தின் மனோகாம்னாவில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு சுற்றுலா வேனில் இந்தியா திரும்பியுள்ளனர். பேருந்தில் 14 பேர் பயணம் செய்த நிலையில், பேருந்து மலைப்பகுதியில் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+