புதிய கல்விக்கொள்கை பற்றி உங்க கருத்தை சொல்லுங்க - ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு
புதிய கல்விக்கொள்கையில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்ன நீக்க வேண்டும் என்று ஏதேனும் கருத்துகள் இருந்தால் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் கருத்து கூறலாம் என்று மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: புதிய கல்விக்கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்,சேர்க்க வேண்டிய விசயங்கள் பற்றி வரும் 31ஆம் தேதிவரை பள்ளி முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் கருத்துக்களை கூறலாம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். http://innovateindia.mygov.in/nep2020 இந்த இணைய தளத்தில் அவர்களின் விவரத்தை தெரிவித்து, பாடங்களை படித்து பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில அரசுகள் புதிய கல்விக்கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.


இந்நிலையில் நாளையில் இருந்து வருகிற 31ஆம்தேதி வரை பள்ளி முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

http://innovateindia.mygov.in/nep2020 இந்த இணைய தளத்தில் அவர்களின் விவரத்தை தெரிவித்து, பாடங்களை படித்து பார்க்கலாம். அதில் ஏதும் சேர்க்க, நீக்க வேண்டும் என்று கருதினால் கருத்து தெரிவிக்கலாம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications