‛நுபுர் சர்மா துணிச்சலானவர்’.. நபிகள் நாயகம் சர்ச்சைக்கு நெதர்லாந்து தலைவர் ஆதரவு! யார் இந்த கீரிட்?
டெல்லி: நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில் தான் அவர துணிச்சல் மிக்கவர். அவர் உண்மையை பேசியுள்ளார் . இந்தியா வரும்போது அவரை சந்திப்பேன் என நுபுர் சர்மா பற்றி நெதர்லாந்து நாட்டின் தலைவரான கீர்ட் வில்டர்ஸ் தெரிவித்து மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளார்.
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது இஸ்லாமிய இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.

நுபுர் சர்மாவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் அவரை கண்டித்தனர். இதையடுத்து பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இது ஒருபுறம் இருக்க நுபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் புகார் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் நுபுர் சர்மாவின் தலையை வெட்டுவோருக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை பரிசாக வழங்குவதாக அஜ்மீர் பகுதியை சேர்ந்த சல்மான் சிஷ்டி வீடியோ வெளியிட்டார்.
I sent a personal message of support to the brave Nupur Sharma, who is threatened by Islamists for years now only for speaking the truth. Freedom loving people all over the world should support her. I hope to meet her one day while visiting India. #NupurSharma
— Geert Wilders (@geertwilderspvv) February 17, 2024
இதையடுத்து தன்மீதான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், ‛‛நுபுர் சர்மாவின் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி உள்ளது. நாடு தீப்பற்றி எரிவதற்கு அவர் மட்டுமே தான் காரணம். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறதா இல்லை அவரால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா?. நுபுர் சர்மா டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்'' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
தற்போது நுபுர் சர்மா விவகாரம் அமைதியாக இருக்கிறது. இந்நிலையில் தான் நெதர்லாந்து நாட்டின் தீவிர வலதுசாரி தலைவராக அறியப்படும் கீர்ட் வில்டர்ஸ் நுபுர் சர்மாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா வரும்போது சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛உண்மையை பேசியதற்காக மட்டுமே இஸ்லாமியர்களால் நுபுர் சர்மா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார். அவரது துணிச்சலை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கிறேன். உலகம் முழுவதும் சுதந்திரத்தை விரும்புபவர்கள் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்தியா செல்லும்போது நான் அவரை சந்திப்பேன் என்று நம்புகிறேன்'' என கூறியுள்ளார்.
கீர்ட் வில்டர்ஸ் என்பவர் நெதர்லாந்தின் வருங்கால பிரதமர் வேட்பாளராகும் முடிவில் உள்ளார். தீவிர வலதுசாரி ஆதரவாளராக இவர் உள்ளார். Party for Freedom என்ற கட்சியின் தலைரவாக இவர் உள்ளார். கடந்த ஆண்டு அங்கு நடந்த பிரதமர் தேர்தலில் அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இத்தகைய சூழலில் தான் அவர் நுபுர் சர்மா துணிச்சல் மிக்கவர் எனவும், இந்தியா வரும்போது அவரை சந்திக்க உள்ளதாகவும் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
இப்படி நுபுர் சர்மா பற்றி பேசி கீர்ட் வில்டர்ஸ் பரபரப்பை கிளப்புவது இது முதல் முறையல்ல. கடந்த 2022ம் ஆண்டில் அவர் நுபுர் சர்மா பற்றி கூறியிருந்தார். அப்போது அவர், ‛‛நுபுர் ஷர்மா உண்மையைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை. அவரை நினைத்து பெருமைப்பட வேண்டும். நோபல் பரிசுக்கு அவர் தகுதியானவர். இந்தியா ஒரு இந்து தேசம். இஸ்லாமிய வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக இந்துக்களை வலுவாகப் பாதுகாக்க இந்திய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது'' என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications