டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதயமே நொறுங்கிவிட்டது.. ட்விட்டரில் இருந்து வெளியேறாதீர்.. மோடிக்கு நெட்டிசன்கள் கதறல் ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: பேஸ்புக், டவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில் #NoSir என்ற ஹேஷ்டேக் வைரலாகி ட்விட்டரில் முதலிடத்தில் உள்ளது.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்களை கொண்ட உலகத் தலைவர்களில் முன்னணியில் இருப்பவர் மோடிதான். அவரது ட்விட்டர் கணக்கை 53.3 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

இதன் மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஆதரவை மோடி திரட்டினார். இந்த நிலையில் நேற்றிரவு அதிரடியாக அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

ஆங்கில ஊடகங்கள்

ஆங்கில ஊடகங்கள்

அதில் அவர் கூறுகையில் இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் ஆகிய சமூக வலைதள கணக்குகளை விட்டுவிடலாம் என்று யோசிக்கிறேன். உங்கள் அனைவரையும் போஸ்ட் செய்ய வைப்பேன் என தெரிவித்துள்ளார். இவர் கூறியுள்ளது ஆங்கில ஊடகங்களில் பிரேக்கிங் செய்தியாக மாறியுள்ளது.

#NoSir

#NoSir

இந்த ட்வீட்டிற்கு என்ன காரணம் என்பதை பிரதமர் விளக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ட்விட்டரை விட்டு போக வேண்டாம் என நெட்டிசன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக #NoSir என்ற ஹேஷ்டேக் டிரென்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அது போல் #NoModiNoTwitter ஹேஷ்டேக்கும் டிரென்டிங்கில் உள்ளது.

ட்விட்டரில் மோடி

இன்னும் 6 நாட்களில் ட்விட்டரில் மோடி இருக்க மாட்டார். அது வரை அவரது ப்ரபொல் பிக்சராக வைக்கிறேன். ஏனெனில் மோடி ட்விட்டரில் இருந்து வெளியேறிவிட்டால் நானும் வெளியேறிவிடுவேன் என்கிரார் இந்த வலைஞர்.

அக்கவுன்ட்

அன்பான இந்திய ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை தேசப்பற்றாளர்களின் கணக்கின் மதிப்பை நீங்கள் உணருவீர்கள். நமது பிரதமர் நரேந்திர மோடி இந்த சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறிவிட்டால், அவரது கோடிக்கணக்கான பின்தொடர்பாளர்கள் தங்கள் அக்கவுன்ட்டுகளை நீக்கிவிடுவர். இல்லாவிட்டால் எதையும் போஸ்ட் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவர் என்கிறார் இந்த வலைஞர்.

கைலாயத்தின் சிவன்

நரேந்தி மோடி அவர்களே வேண்டாம். உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். நீங்கள் ட்விட்டரை விட்டு வெளியேறிவிட்டால் எங்கள் உணர்வுகளை உங்களிடம் வெளிப்படுத்துவது கடினமாகிவிடும். சாதாரண குடிமக்களுடன் நீங்கள் நேரடி தொடர்பில் இருப்பதற்கு ட்விட்டரில் இருப்பதுதான் ஒரே வழி. நீங்கள் கைலாயத்தின் சிவன், உங்கள் லட்சியத்திலிருந்து விலகியதில்லை. யாருக்கும் தொல்லை கொடுத்ததில்லை என்கிறார் இந்த வலைஞர்.

பாபுலாரிட்டி

தேர்தல் பொதுக் கூட்டமாக இருந்தாலும் சரி, சமூகவலைதளமாக இருந்தாலும் சரி. இதுதான் மோடியின் பாபுலாரிட்டி. இதை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது என்கிறார் இவர்.

வெளியேறாதீர்

நீங்கள் ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன் என கூறியவுடன் என் இதயமே நொறுங்கிவிட்டது போல் இருக்கிறது. தயவு செய்து ட்விட்டரை விட்டு வெளியேறாதீர்கள் என்கிறார் இந்த நெட்டிசன்.

English summary
Netisans cry and says no to Narendra Modi as he decides to close all his social media accounts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X