மக்களே உஷார்.. தென் இந்தியாவில் அதிகம் பரவுகிறது புது வகை உருமாறிய AY.4.2 கொரோனா.. தப்புவது எப்படி?
டெல்லி: புதிய AY.4.2 உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். புது வகை கொரோனா வேகமாக பரவக் கூடியது. ஆனால், அது அதிக ஆபத்தானது அல்ல என்று ICMR விஞ்ஞானி டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
"பீதி அவசியமில்லை, ஆனால் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான நடத்தையை அதிகரிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
AY.4.2 எனப்படும் SARS-CoV2 கொரோனா வகையின் சுமார் 17 மாதிரிகள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

டெல்டா உருமாற்றம்
AY.4.2 என்பது கொரோனாவுக்கு காரணமான SARS-CoV-2 வைரஸின் டெல்டா உருமாறிய வகையாகும். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டெல்டா வகை கொரோனா இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகை கொரோனாதான் இந்தியாவில் இப்போதும் அதிகம் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

வேகமாக பரவக் கூடியது
"புதிய டெல்டா உருமாறிய கொரோனா வேகமாக பரவக்கூடியதாகத் தெரிகிறது. ஆனால் அது ஆபத்தானது அல்ல. ஒரு உருமாற்றம் ஒடுக்கப்படும்போது அது புதிதாக உருமாறுகிறது. இது மிகவும் பரவக்கூடியதாக இருக்கலாம். இருப்பினும், இது மிகவும் தீவிரமானதாக இருக்கும் என்று சொல்வது கடினம், "என்று ICMR இன் தொற்றுநோயியல் துறையின் தலைவர் பாண்டா கூறினார்.

தென் மாநிலங்களில் அதிகம்
"நாம் பீதியை உருவாக்கக்கூடாது, ஆனால் விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் கோவிட் பொருத்தமான நடத்தையைப் பின்பற்றுவது அவசியம்" என்கிறார் சமிரன் பாண்டா. GISAID அமைப்பின் டேட்டா படி, AY.4.2 இன் ஏழு மாதிரிகள் ஆந்திரப் பிரதேசத்திலும், இரண்டு கர்நாடகாவிலும், இரண்டு தெலுங்கானாவிலும், நான்கு கேரளாவிலும், ஜம்மு & காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒன்று கண்டறியப்பட்டுள்ளன. அதாவது தென் இந்தியாவில் அதிக அளவுக்கு இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Recommended Video

தப்பிக்க என்ன வழி
ICMR இன் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NARI) இயக்குனராக இருக்கும் பாண்டாவின் கருத்துப்படி, தடுப்பூசி மற்றும் முககவசம் பயன்பாடு விதிவிலக்கு இல்லாமல் பின்பற்றப்பட வேண்டும். புதிய வேரியன்ட் பழையதை போல அதே வழிகளில் பரவுகிறது. எனவே முகக் கவசத்தை பயன்படுத்துவோம் வைரஸ் பரவலை முறியடிப்போம், என்று அவர் தெரிவித்துள்ளார்.

மக்களே உஷார்
முககவசங்கள் தொற்றுநோய் பரவுவதை தடுக்கும். தடுப்பூசிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாவதையும், மரணத்தையும் தடுக்கும். எந்தவொரு வேரியன்ட்டை பற்றியும், நாம் கவலைப்படாமல், இந்த விஷயங்களையும் பின்பற்றினால் கொரோனா தொற்று இல்லாத உலகை உருவாக்க முடியும் என்கிறார் டாக்டர் சமிரன் பாண்டா.

மத்திய அமைச்சர்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறுகையில், AY.4.2 குறித்து ஒரு குழு ஆய்வு செய்து வருகிறது. ஐசிஎம்ஆர் மற்றும் என்சிடிசி குழுக்கள் இதைச் செய்து வருகின்றன என்று கூறியுள்ளார். மேலும், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியான ZyCoV-Dக்கு விலை நிர்ணயம் செய்யும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications