Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி ஆடிட்டர் எல்லாம் தேவையில்லை.. புதிய வருமான வரி சட்டத்தின் சிறப்பம்சமே இதுதான்.. எளிய விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது சுமார் 60 ஆண்டுகள் பழமையான 1961இன் வருமான வரிச் சட்டத்தை மாற்றுவதாக இருக்கும். பழைய வருமான வரி சட்டம் கொண்டு வரப்பட்டுப் பல காலம் ஆகிவிட்ட நிலையில், இந்த மாற்றம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நமது மத்திய அரசின் வருமானங்களில் வருமான வரி என்பது முக்கியமானதாக இருக்கிறது. இத்தனை காலம் வருமான வரி என்பது 1961இன் வருமான வரிச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்தது.

budget 2025 income tax

புதிய சட்டம்:

ஆனால், இந்தச் சட்டம் மிகவும் சிக்கலானதாகவும் சாதாரண மக்கள் படிக்க முடியாத அளவுக்குக் குழப்பமாக இருப்பதாகவும் பலரும் கூறி வந்தனர். இதனால் மத்திய அரசு வருமான வரி சட்டத்தை மாற்ற முடிவு செய்துள்ளது. பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாகப் பேசுகையில், "புதிய மசோதா ஏற்கனவே உள்ள மசோதாவை விடத் தெளிவாகவும் நேரடியாகவும் இருக்கும். இது வரி செலுத்துவோர் எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி இருக்கும். இது தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கும்" என்றார்.

இந்த புதிய மசோதா அனைவரும் படிக்க எளிமையானதாகவும், குறுகியதாகவும் படிக்க ஏற்றபடியும் இருக்கும். இதில் 536 பிரிவுகள், 16 அட்டவணைகள் மற்றும் 23 அத்தியாயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 298 பிரிவுகள் மற்றும் 14 அட்டவணைகளைக் கொண்ட பழைய சட்டத்துடன் ஒப்பிடும்போது இது எளிமையாகவும் படித்தால் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் இருக்கும். பழைய சட்டத்தை விட இது சரிபாதியாகவே இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஏன் முக்கியம்:

இது குறித்து டெலாய்ட் இந்தியாவின் ரோஹிண்டன் சித்வா கூறுகையில், "இது ரொம்பவே முக்கியமான ஒன்று. பழைய சட்டம் மிகவும் சிக்கலாகவும் குழப்பமாகவும் இருக்கும். கணக்காளர் மட்டுமே படித்துப் புரிந்து கொள்வதாக இருக்கும். ஆனால், இந்த சட்டம் எளிமையாக இருக்கும். இது நாட்டின் வரி முறையை மொத்தமாக மாற்றி அமைப்பதாக இருக்கும். இது வரி செலுத்துவோருக்கு ஏற்றதாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் இருக்கும்" என்றார்.

முக்கிய மாற்றங்கள்:

இதில் எல்லாவற்றையும் விட முக்கியமானது இந்த சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வரிகள் என்பது கணக்காளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்வதாக இருக்கும். எளிமையான வாக்கியங்கள் மட்டுமின்றி மக்கள் புரிந்து கொள்ள ஏதுவாக அட்டவணைகளும் அதில் இருக்கும். வரி செலுத்துவோரின் உரிமைகள் மற்றும் கடமைகளைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுவதாக இந்த சட்டம் இருக்கும்.

பழைய வருமான வரி சட்டத்தில் notwithstanding என்ற வார்த்தை தான் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அது பெரியளவில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், புதிய வருமான வரி சட்டத்தில் அந்த வார்த்தையே பயன்படுத்தப்பட்டு இருக்காது. மாறாக irrespective என்ற வார்த்தையையே பயன்படுத்தியுள்ளனராம். இது சட்டத்தைப் புரிந்து கொள்ள மிகப் பெரியளவில் நமக்கு உதவும்.

அதேபோல 'assessment year' என்ற கான்செப்ட்டை நீக்கப்பட்டு, மொத்தமாக அனைத்தும் Tax Year என்பதற்குள் கொண்டு வரப்படும். இது வரிக் கணக்கீடுகளை எளிமையாக்கப் பெரியளவில் உதவும்.

தெளிவான விளக்கம்:

மேலும், புதிய மசோதா வரி சட்டத்தில் வருமானம், வெளிநாட்டு வருமானம் மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் எவை என்பது மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தேவையற்ற குழப்பங்கள் குறைக்கப்படும். இது வரி தவிர்ப்பைக் குறைப்பதற்கும், வரி சார்ந்த குழப்பங்களைத் தவிர்க்கவும் பயன்படும்.

அதாவது வருமான வரி சட்டத்தை ஆடிட்டர் இல்லாமல் நாமே தாக்கல் செய்யும் அளவுக்கு எளிமையானதாக இருக்கும். அதேநேரம் இந்த மசோதா இப்போது தான் நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது. இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகே சட்டமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+